Friday, March 1, 2019


சென்னை, ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' நுழைவு தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியராக பணியாற்ற, 'டெட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முறைகேடுஒன்று முதல், ஐந்தாம் வகுப்புக்கு, டெட் முதல் தாளும்; ஆறு முதல், எட்டாம் வகுப்புக்கு, இரண்டாம் தாளும் தேர்ச்சி பெற வேண்டும்.கடைசியாக, டெட் நுழைவு தேர்வு, 2017 ஏப்ரலில் நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எனவே, 2018ல், தேர்வு நடத்துவது தள்ளி போனது.ஆன்லைன் பதிவுஇந்நிலையில், இந்த ஆண்டு, டெட் தேர்வு அறிவிப்பு நேற்று வெளியானது. தேர்வு விதிகள், பாடங்கள், 'ஆன்லைன்' பதிவு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், வரும், 15ம் தேதி முதல், ஏப்., 5 வரை ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை, trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

0 comments:

Post a Comment