ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் வரும் 2ஆவது வியாழக்கிழமை 'உலக சிறுநீரக தினம்' அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கமைய இன்று (10) 'சிறுவரும் சிறுநீரக நோயும் 'ஆரம்பத்தில் கவனமாக செயற்படுவதன் மூலம் அனைவரையும் சிறுநீரக நோயிலிருந்து பாதுகாப்போம்' (Act Early to Prevent It) எனும் தொனிப்பொருளில் உலகளவிய ரீதியில் உலக சிறுநீரக தினம் நினைவுகூறப்படுகிறது.
சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் அது தொடர்பான நோய்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
66 நாடுகளின் ஒத்துழைப்புடன் 2006ஆம் ஆண்டில் முதன் முதலாக உலக சிறுநீரக தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நாடுகளின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டில் 88 ஆக அதிகரித்தது.
0 comments:
Post a Comment