Monday, March 4, 2019

*தமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனர், நேற்று ஓய்வுபெறும் நிலையில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார் !!!.*

*தமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனராக இருந்த, ஜெயராஜ், 58, நேற்று ஓய்வு பெற இருந்தார் !!!. இவர், மூன்று மாதங்களுக்கு முன், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலராக பணி புரிந்தார் !!!.*

*அவரது பணி காலத்தில், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், லட்சக் கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும், ஆசிரியர்கள் நியமனத்தில், முறைகேடு நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன !!!. இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் விசாரணை நடத்தினார் !!!.*

*ஜெயராஜ், ஓய்வுபெறும் நேரத்தில், அவர் மீதான குற்றச் சாட்டுகள் அடிப்படையில், விசாரணை நடந்து வந்தது !!!. இந்நிலையில், நேற்று, ஜெயராஜை சஸ்பெண்ட் செய்து, பள்ளிக் கல்வித் துறை அரசு செயலர், உத்தரவிட்டார் !!!. இதற்கான நகல், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டது !!!.*

0 comments:

Post a Comment