Tuesday, March 12, 2019



லோக்சபா தேர்தல், ஏப்ரலில் நடக்க உள்ள நிலையில், பள்ளி இறுதி தேர்வுகளை, முன் கூட்டியே நடத்தி முடிக்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நாடு முழுவதற்குமான லோக்சபா தேர்தல் தேதி, நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரியில், ஏப்., 18ல், ஒரே கட்டமாக, அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணிகளில், ஆசிரியர்கள் அதிகம் ஈடுபடுத்தப்படுவர்.தேர்தல் தேதிக்கு முன், மூன்று முறை, ஆசிரியர்களுக்கு முன் தயாரிப்பு பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியல், முன் கூட்டியே தயாரிக்கப்படும். அதேபோல, ஓட்டு சாவடி மையங்கள் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளும், தேர்வுகளை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள், மார்ச், 29ல் முடிகின்றன.ஆனால், மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள், ஏப்ரல், 10ல் தான் துவங்கும் என, ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அட்டவணை செய்துள்ளது. தற்போது, தேர்தல் காரணமாக, ஏப்ரல், 10க்குள் தேர்வுகளை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு, ஏப்.,1ல் துவங்கி, ஏப்., 10க்குள் தேர்வுகளை முடிக்க வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விடுமுறை பாதிக்காது கோடை விடுமுறைக்கு பாதிப்பில்லாத வகையில், தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வரவேற்றுள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:லோக்சபா தேர்தல், தமிழகம், புதுச்சேரியில், ஏப்ரல், 18ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரலில் நடத்துவது, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மகிழ்ச்சியை தரும். அவர்களுக்கு கோடை விடுமுறை கிடைத்து விடும். ஆசிரியர்களுக்கும், ஏப்ரலுக்குள் தேர்தல் மற்றும் தேர்வு பணிகள் முடிந்து விடும் என்பதால், மே மாதம் கோடை விடுமுறை கிடைக்கும்.ஆனால், தேர்தல் காரணமாக, ஏப்ரல் முதல் வாரத்துக்குள், பொது தேர்வுக்கான, விடைத்தாள் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கு, மிக குறைந்த கால அவகாசமே உள்ளது. அதேபோல, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்புக்கான ஆண்டு இறுதி தேர்வுகளையும் நடத்தி முடிக்க வேண்டும்.மேலும், தேர்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு, மார்ச் இறுதி வாரம் முதல், ஏப்ரல், 16 வரை, நான்கு முறை பயிற்சி வகுப்புகள் நடத்துவர். கட்டாயம்இவற்றில், ஆசிரியர்கள் பங்கேற்கும் போது, பள்ளி பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். அதற்கேற்ப, பள்ளி கல்வித்துறை, திட்டமிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பள்ளி தேர்வுகளை, ஏப்ரல் முதல் வாரத்திற்குள் முடித்து விடலாம். ஏப்ரல் மூன்றாம் வாரம் தேர்தல் முடிந்ததும், மே மாதம் வரையில், கோடை விடுமுறையை கொண்டாடலாம் என்பதால், பெற்றோரும், மாணவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment