Sunday, October 28, 2018

வரலாற்றில் இன்று:28.10.2018

அக்டோபர் 28 கிரிகோரியன் ஆண்டின் 301 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 302 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 64 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
306 – மாக்செண்டியஸ் ரோமப் பேரரசன் ஆனான்.
312 – முதலாம் கொன்ஸ்டண்டீன் மாக்செண்டியசைத் தோற்கடித்து ரோமப் பேரரசனானான்.
1492 – ஸ்பெயின் நாட்டுக் கடலோடியான கொலம்பசும் அவரது கூட்டத்தினரும் வழி தவறிச் சென்று கியூபாவில் கரை இறங்கினர்.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டனில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை பிரித்தானியா தடுத்தது.
1834 – சுவான் ஆற்றுக் குடியேற்றத்தில் (தற்போதய மேற்கு அவுஸ்திரேலியாவில்) பழங்குடிகளுக்கும் ஆங்கிலேயக் குடியேற்ற வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பல பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
1886 – நியூ யார்க்கில் அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லாண்ட் விடுதலைச் சிலையைத் திறந்து வைத்தார்.
1918 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரியிடம் இருந்து செக்கொசிலவாக்கியா விடுதலை பெற்றது.
1918 – மேற்கு கலீசியாவில் புதிய போலந்து அரசு அமைக்கப்பட்டது.
1922 – முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் ரோம் நகரை சென்றடைந்து இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அல்பேனியா ஊடாக கிறீஸ் நாட்டைக் கைப்பற்றியது. இந்நாள் கிறீசின் “ஓக்கி நாள்” (Όχι=No, இல்லை) ஆக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
1941 – லித்துவேனியாவின் கௌனாஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் 9,000 யூதர்களை சுட்டுக் கொன்று அதே இடத்தில் புதைத்தனர்.
1942 – கனடா முதல் அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
1942 – போலந்தின் கிராக்கொவ் நகரில் இருந்து 2,000 யூத சிறுவர்களும் 6,000 பெரியவர்களும் நாசிகளினால் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
1948 – சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் போல் முல்லர் டிடிரியைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு பெற்றார்.
1962 – கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார்.
1971 – ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது (2007 வரை ஒன்றே ஒன்றுமான) “புரொஸ்பெரோ” என்ற செய்மதியை விண்ணுக்கு ஏவியது.
1972 – முதலாவது ஏர்பஸ் A300 பறக்க விடப்பட்டது.
1985 – சண்டினீஸ்டாவின் டானியேல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் அதிபரானார்.
1985 – மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
2001 – பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் கண்முடித்தனமாக சுட்டதில் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
2001 – கேரளாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நாகர்கோயில் பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது.
2006 – 1930களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிகீவ்னியா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.
2006 – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.
பிறப்புகள்
1955 – பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்
1956 – மஹ்மூத் அஹ்மதிநெஜாத், ஈரான் குடியரசுத் தலைவர்
இறப்புகள்
1627 – ஜஹாங்கீர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1569)
1704 – ஜான் லாக், ஆங்கிலேய தத்துவவியலாளர் (பி. 1632)
1900 – மாக்ஸ் முல்லர், ஜெர்மனிய மொழியியலாளர் (பி. 1823)
1997 – மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், கருநாடக இசை வீணை வாத்தியக்கலைஞர் (பி: 1920)
2014 – மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் அரசுத்தலைவர் (பி. 1937)
சிறப்பு தினம்
செக் குடியரசு, சிலவாக்கியா – தேசிய நாள் (1918)

0 comments:

Post a Comment