தேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்
Home
»
»Unlabelled
» தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் காலிப் பணி யிடதேர்வு குழுமத்தால் நேரடி நியமனம்
Thursday, October 25, 2018
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment