Wednesday, October 31, 2018


கேட்டில் வைட்டமின் ஏ வளமாக உள்ளது. இது உடலின் உள்ளுறுப்புக்களைச் சுற்றி ஓர் பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, நோய்க்கிருமிகளின் தாக்கத்தைத் தடுக்கும். மேலும் கேரட் ஜூஸை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிவது குறைந்து, இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறையும்
.கொலஸ்ட்ரால் குறையும் கேரட்டில் உள்ள பொட்டாசியம், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கச் செய்யும். மேலும் இது கல்லீரலுக்கும் நல்லது. எனவே உங்கள் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் கேரட் ஜூஸை குடித்து வருவது நல்ல பலனைத் தரும்
கேரட் ஜூஸ்க்கு தேவையான பொருட்கள் :
கேரட் - 1

தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி

பால் - கால் டம்ளர்

பனை வெல்லம் - இரண்டு டீஸ்பூன்

ஏலக்காய் - 1
செய்முறை :
பாலை நன்கு கொதிக்க வைத்து, ஆற வைத்து கொள்ள வேண்டும். பின் கேரட் மற்றும் தேங்காய் துருவலையும், பாலையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின் பனை வெல்லம் மற்றும் ஏலக்காயை சேர்த்து அரைத்தால் கேரட் ஜூஸ் தயாராகி விடும்.
பயன்கள் :
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்.

கண்பார்வை தெளிவுறும்.

மலட்டு தன்மை நீங்கும்.

இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை குணமாக நல்ல மருந்து

0 comments:

Post a Comment