Tuesday, October 30, 2018


1909 அக்டோபர் 30 அன்று மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சிகுடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் வீட்டு நூலகத்திருந்த அனைத்து அறிவியல் புத்தகங்களையும் படித்து முடித்தார். பாபாவின் தந்தை அவரை ஒரு பொறியாளராக ஆக்க வேண்டும் என்று முனைந்து அவரை இங்கிலாந்திற்குஅனுப்பினார். தந்தையின் விருப்பத்திற்கு இணங்க பொறியியல்படிப்பில் சேர 1927-ல் கேம்பிரிட்ஜ் புறப்பட்டார்
இந்திய அணுவியல் துறை தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் பிறந்த நாளான இன்று, அவரை பற்றிய அரிய முத்துகள்.
• மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே வீட்டு நூலகத்தில் இருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட அத்தனை புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டார்.
• பட்டப் படிப்பு முடித்தவுடன் மெக்கானிக்கல் இன்ஜினீ யரிங் படிப்பதற்காக அவரை பெற்றோர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவருக்கு இயற்பியலில்தான் ஆர்வம். அப்பாவிடம் அணு இயற்பியல் படிக்க விரும்புவதாக கூறினார்.
• அதன்படியே, பாபாவை அவரது அப்பா இயற்பியல் படிக்க வைத்தார். 1932ல் மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
• 1934-ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இந்த கால கட்டத்தில் இவர் நீல்ஸ் போர் என்பவருடன் மேற்கொண்ட ஆய்வுகள் குவாண்டம் கோட்பாட்டுக்கு இட்டுச் சென்றது. மேலும் வால்டர் ஹைட்லருடன் மேற்கொண்ட இவரது ஆராய்ச்சிதான் காஸ்மிக் கதிர்களைப் புரிந்துகொள்வதில் மிக முக்கிய பங்கு வகித்தது.
• இந்தியா திரும்பிய அவர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் துறை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். காஸ்மிக் கதிர் ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்கினார்.
• அமெரிக்காவில், 1942-ஆம் ஆண்டு அணு உலை சோதனை நடத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டாட்டாவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, மும்பையில் இதற்கான ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு நிலையத்தின் இயக்குநராக ஹோமிபாபா பொறுப் பேற்றார்.
• இந்தியா விடுதலை அடைந்த பிறகு உலகம் முழுவதும் உள்ள இந்திய விஞ்ஞானிகளை தாயகம் திரும்பும்படி கேட்டுக்கொண்டார். இவரது அழைப்பை ஏற்று இந்தியா வந்த அவர்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் அணுசக்தி வளர்ச்சிக்காக பணிபுரியத் தொடங்கினர்.
• அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956ல் மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது.
• 1955ல் ஜெனீவாவில் நடைபெற்ற அணுசக்தியை அமைதி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் முதல் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். மேலும், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவை அடுத்து அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கான ஆரம்பகட்ட முயற்சிகளை விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொண்டார்.
• ஜஹாங்கீர் ஹோமி பாபா ஸ்விட்சர்லாந்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 56-ஆவது வயதில் மரணமடைந்தார்.

0 comments:

Post a Comment