Monday, October 29, 2018

ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நவ. 12 வரை விண்ணப்பிக்கலாம் 

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு மற்றும் சுய நிதி மருத்துவக் கல்லூரி களில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா பட்டப்படிப் பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை உயர் நீதிமன்றம் கடந்த அக்.12-ம் தேதி சுட்டிக்காட்டிய விடுபட்ட விதிகளின்படி, இந்தப் பட்டப்படிப்புகளில் சேர சில வகுப்பினருக்கான குறைந்த பட்ச கல்வித்தகுதி மதிப்பெண்ணில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்புகளை, அக்.29 முதல் நவ.12-ம் தேதி வரை வரை நெல்லை, சென்னை அரும்பாக்கம், மதுரை, நாகர்கோவிலில் அரசு இந்திய முறை மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் இருந்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment