இந்தியாவை பொறுத்த வரையில் இத்தினம் அக்டோபர் 30-ம் தேதி
நான் நல்லா சம்பாதிக்கிறேன்; ஒன்னுமே மிஞ்சமாட்டேங்குது...' என பலர் சொல்லக் கேட்டிருப்போம். இதற்கு காரணம், அவர்களிடம் சேமிப்பு பழக்கம் இல்லாததே. வருமானத்துக்கு ஏற்ப, செலவு செய்தால் இந்த பிரச்னையே இருக்காது. சிக்கன தினத்திற்கான யோசனை வர முக்கிய காரணம், பொருளாதார வகையில் ஒரு நாடு முன்னேற வேண்டும் என்ற எண்ணம்தான். 1921-ல் முதன்முறையாக ஸ்பெய்ன் நாட்டினர் இத்தினத்தை கொண்டாடினர். அதன்பின்னர் சிக்கனத்தை மக்களுக்கு உணர்த்துவது எந்த அளவிற்கு நாட்டிற்கும், உலகமயமாதலிற்கும் முக்கியம் என்பதை அறிந்து ஜெர்மனி, ஆஸ்திரேலியா என இன்னபிற நாட்டினரும் தங்கள் மக்களுக்கு இத்தினத்தினை அறிமுகப்படுத்தினர். உலக சிக்கன தினம் அக்டோபர் 31-ம் தேதி என்றபோதிலும், இந்தியாவை பொறுத்த வரையில் இத்தினம் அக்டோபர் 30-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. சில நாடுகளைத் தவிர்த்து மீதியுள்ள நாடுகளில் எல்லாம் இத்தினம் பொது விடுமுறையாகும். அன்றைய தினம், வங்கிகள் மட்டும் செயல்படும். மக்கள் அத்தினத்தின் முக்கியத்துவத்தை அறிந்து சேமிப்பு குறித்த சிக்கன முறைகளில் தெளிவடைய வேண்டும், தெளிவடைவார்கள் என்பதற்காகத் தான் அவர்களுக்கு இந்த பொது விடுமுறை.
என்ன பயன்:
சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான். இது, வளங்களை வீணடிக்காமல், திறமையாக கையாள்வதையே குறிக்கும். அதாவது, அவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்வது என அர்த்தம். சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது. சிக்கனமாக சேமிக்கப்பட்ட பணம் தான், எல்லா தொழிலுக்கும் மூலதனம்.
நீங்கள் எவ்வகை:
செலவு செய்வதை கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம் என நான்கு வகையாக பிரிக்கலாம். கஞ்சத்தனம் என்பது, அவசிய தேவைகளைக்கூட நிறைவேற்ற மனம் இல்லாதவர்களை குறிக்கும். இது வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். சிக்கனம் என்பது, தகுதியறிந்து செலவு செய்வது. இது சுமூகமான வாழ்க்கைக்கு சிறந்த வழி.
ஆடம்பரம் என்பது, வசதியானவன் என அடுத்தவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவும், அடுத்தவர்களைப் போல இருக்க வேண்டும் என நினைத்தும் தகுதியை மீறி செலவு செய்வது. நான்காவதாக உள்ள ஊதாரித்தனம் என்பது கண்மூடித்தனமாக, தேவையில்லாத செலவுகள் செய்வது. இது அழிவுப்பாதைக்குத் தான் அழைத்துச் செல்லும்.
ஆடம்பரம் என்பது, வசதியானவன் என அடுத்தவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவும், அடுத்தவர்களைப் போல இருக்க வேண்டும் என நினைத்தும் தகுதியை மீறி செலவு செய்வது. நான்காவதாக உள்ள ஊதாரித்தனம் என்பது கண்மூடித்தனமாக, தேவையில்லாத செலவுகள் செய்வது. இது அழிவுப்பாதைக்குத் தான் அழைத்துச் செல்லும்.
0 comments:
Post a Comment