Sunday, October 28, 2018

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த ஒரு நம்பிக்கை, அமேஸான் காடுகளில் ஓடும் வெந்நீர் நதி. கொதிக்கும் அளவுக்கு ஓடும் நீர், அதனுள் விழும் அனைத்தையும் பொரித்து, கருகச் செய்து சாகடிக்கிறது.
அங்கு நிலவும் கதைகளின் படி, ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ஒரு சிறிய குழு அமேஸான் மழைக்காடுகளில் நிறையத் தங்கம் இருப்பதாகத் தகவல் கிடைத்து அதை எடுக்க உள்ளே சென்றது.
சென்றவர்கள் அங்கே விஷத்தன்மையுடன் நீர், மனிதனை விழுங்கும் பாம்புகள், இதெல்லாம் போதாது என வெந்நீர் ஓடும் ஆறு என எல்லாம் இருப்பதாகவும் இதில் அந்த ஆறு அனைவருக்கும் தீப்புண்களை ஏற்படுத்துவதாகவும் பீதியுடன் கூறியுள்ளனர்.அதே பெரு நாட்டைச் சேர்ந்த புவி விஞ்ஞானி ஆண்ட்ரெஸ் ரூஸோ (Andrés Ruzo) சிறு வயதிலிருந்தே இவ்வகை கதைகளைக் கேட்டு வளர்ந்தார்.அமேஸான் காடுகளின் அடர்ந்த பகுதியில் ஒரு நதி இருக்கிறது. அதன் அடியில் ஏதோ பெரிய அடுப்பு இருப்பதைப் போல அதன் நீர் எப்போதும் கொதி நிலையிலேயே இருக்கிறது.” அவர் தாத்தாவின் இந்த வார்த்தைகள் அவரின் அறிவியல் அறிவை எப்போதும் சீண்டிக்கொண்டிருந்தன.
இதுபோக, அவரின் தாய் சிறுவயதில், தன் தங்கையுடன் அந்த நீரில் நீந்தி உள்ளதாகவும் கூறி இவரின் ஆர்வத்தை மேலும் கூட்டினார்.
இயல்பிலேயே புவியியலில் ஆர்வம் மிகுந்தவராக இருந்த ஆண்ட்ரெஸ் அந்தத் துறையில் கற்றுத் தேர்ந்தார். முனைவர் பட்டம் பெற புவிவெப்ப சக்திகுறித்த ஆய்வில் இறங்கினார்.
அப்போது, தன் தாத்தா கூறிய அந்த வெந்நீர் நதிகுறித்து ஆராயத் தொடங்கினார். அப்படி உண்மையில் இருக்குமா என்ற தயக்கத்துடன் அமேஸான் காடுகளில், 2011ம் ஆண்டு தன் பயணத்தைத் தொடங்கினார்.
அவர் சந்தித்த வல்லுநர்கள் அனைவரும் அப்படி ஒரு வெந்நீர் நதி நிச்சயம் இருக்கப்போவதில்லை என்றே கூறினார்கள். ஆண்ட்ரெஸ் அவர்களின் அறிவியல் மூளையும், ஒருவேளை அந்த நதியின் அருகில் எரிமலை ஏதேனும் இருந்தால் அப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது என்று கூறியது.
ஆனால், அமேஸான் காடுகள் பகுதியில் எரிமலை எதுவும் கிடையாது. சந்தேகத்துடனே பயணித்த அவருக்கு இன்ப அதிர்ச்சியாக “நான் இருக்கிறேன்” என்று அந்த நதி வெளிச்சத்துக்கு வந்தது. உண்மையில், அதன் நீர் அதீத வெப்பத்தில் இருந்தது.

0 comments:

Post a Comment