Saturday, October 27, 2018













பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:73

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

உரை:

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

பழமொழி :

Cut your coat according to your cloth

வரவுக்குத் தக்க செலவு செய்

பொன்மொழி:

நம்மிடம் இருக்கும்
சந்தோஷத்தைப்
பிறருடன் பங்கிட்டுக்
கொள்ளும்போது,
அந்த சந்தோஷமே
இரண்டு மடங்குகளாக
பெருகுகிறது.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்?
மூளை

2.எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது?கடலூர்

நீதிக்கதை

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?

ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு  அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.

சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள்  மலர்ந்தன. அங்கு வந்த  தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள்  பார்த்துவிட்டனர்.

அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலி ராமன் காவலர்களை பார்த்து “என்மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்?” என்று கேட்டான்.

அவர்களோ! “உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடிய போது அவனை  நாங்கள் பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரின் பார்வைக்காக அழைத்துச் செல்கிறோம்.  வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள  திருடிய ரோஜா பூக்களை பார்” என்று அவன் கைகளை காண்பிக்கச்  செய்தனர்.

தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன்  மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து  தான்  அணிந்திருந்த மேலாடையை கழற்றி மகன்  மேல் போர்த்திவிட்டான்.
இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும்  என்று கூறிவிட்டுச் சென்றார்.
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். உடனே ஒவொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு முடி இருபதனால் அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை
அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னால் அழைத்துச்சென்றனர்.
காவலர்கள் மன்னரை பார்த்து “அரசே! தெனாலி ராமனின் மகன் பூக்களை திருடிய போது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும்” என்று கூறினர்.

மன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்து, பின்னர் அரசர் காவலர்களை பார்த்து, “திருடிய பூக்கள் எங்கே?” என்று கேட்டார்.
காவலர்கள் மன்னரை பார்த்து, “பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசே உள்ளது” என்று காவலர்கள் கூறினர்.

அரசர் தெனாலி மகனை பார்த்து, “உன் கைகளை காட்டு” என்று கூறினார்.
அவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை.

மன்னர் தெனாலிமகனை பார்த்து, “நீ பறித்த பூக்கள் எங்கே?” என்று கேட்டார்
அவனோ! மன்னரைப் பார்த்து, “நான் பூக்கள் எதுவும் பறிக்க வில்லை. என்  தந்தைக்கு அவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி  செய்தார்கள்” என்று கூறினான்.
மன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார்.
தெனாலியும்  அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டனர்.

இன்றைய செய்தி துளிகள்:

1.அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் : முதல்வர் பழனிசாமி உத்தரவு

2.இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் : பிரதமராக பதவியேற்றார் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே

3.பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய திருவாரூர் கலெக்டர் உத்தரவு

4.அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரம் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் - அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு!

5.ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி கொரியாவை வென்றது இந்தியா: அரை இறுதியில் ஜப்பானுடன் மோதல்

0 comments:

Post a Comment