நவம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1444 – ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் ஒட்டோமான் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
1520 – டென்மார்க் மன்னன் இரண்டாம் கிறிஸ்டியான் சுவீடனை முற்றுகையிட்டபோது ஸ்டொக்ஹோம் நகரில் பலரைக் கொன்றான்.
1580 – மூன்று நாள் முற்றுகையை அடுத்து, ஆங்கிலேய இராணுவம் கிட்டத்தட்ட 600 திருத்தந்தை நாடுகளின் இராணுவத்தினரையும், பொதுமக்களையும் அயர்லாந்தில் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.
1674 – ஆங்கிலேய-டச்சு போர்: வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின் படி புதிய நெதர்லாந்தை நெதர்லாந்து இங்கிலாந்திடம் ஒப்படைத்தது.
1847 – ஸ்டீவன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
1871 – காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஸ்கொட்லாந்தின் நாடுகாண் பயணியும் மிஷனரியுமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார்.
1887 – ஹே சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற தொழிலாளர் தலைவர் லண்டனில் டைனமைட் வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
1918 – யாழ்ப்பாணம், சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல கடைகள் சூறையாடப்பட்டன.
1928 – ஹிரொஹீட்டோ ஜப்பானின் 124வது மன்னரானார்.
1970 – சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு “லூனாகோட்” எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
1971 – கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் புனோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமானங்களை அழித்தனர்.
1972 – பேர்மிங்ஹாமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு ஹவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
1993 – தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
1995 – நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ-வீவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.
1999 – பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
2006 – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
2008 – செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.

பிறப்புகள்
1483 – மார்ட்டின் லூதர், கிறித்தவச் சீர்திருத்த இயக்கத் தலைவர் (இ. 1546)
1697 – வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (இ. 1764)
1910 – கொத்தமங்கலம் சுப்பு, எழுத்தாளர், நடிகர் (இ. 1974)
1917 – சோ. தம்பிராஜா, இலங்கை அரசியல்வாதி
1919 – மிக்கைல் கலாசுனிக்கோவ், ரஷ்யாவின் ஏகே47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்தவர். (இ. 2013)
1934 – அ. துரைராஜா, பேராசிரியர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பி. 1994)
1953 – எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (இ. 2014)
1957 – டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்
1960 – நீல் கெய்மென், ஆங்கிலேய எழுத்தாளர்

இறப்புகள்
461 – முதலாம் லியோ, திருத்தந்தை (பி. 400)
1549 – மூன்றாம் பவுல், திருத்தந்தை (பி. 1468)
1891 – ஆர்தர் ராம்போ, பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1854)
1938 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க், துருக்கிய அரசியல்வாதி (பி. 1881)
1977 – தமிழ்வாணன் தமிழக எழுத்தாளர், இதழாசிரியர். (பி.1926)
1982 – லியோனிட் பிரெஷ்னெவ், சோவியத் யூனியன் தலைவர் (பி. 1906)
2006 – நடராஜா ரவிராஜ், ஈழத்தமிழ் அரசியல்வாதி (பி. 1962)
2014 – எம். எஸ். எஸ். பாண்டியன், சமூக ஆய்வாளர், பேராசிரியர்

சிறப்பு நாள்
உலக அறிவியல் நாள் (யுனெஸ்கோ)
0 comments:
Post a Comment