தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் பிஎட் படிப்புக்கான விண்ணப்பங்கள் 11ம் தேதி முதல் இணைய தளத்தில் கிடைக்கும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் பிஎட் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து 11ம் தேதி முதல்பல்கலைக் கழக இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதற்கான கட்டணம் ₹500 செலுத்த வேண்டும்.மேலும், பிஎட் படிக்க தகுதியுள்ள நபர்கள் நேரடியாகவே தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் மண்டல அலுவலங்களில் உரிய கட்டணத்தை செலுத்தி சேர்ந்து கொள்ள முடியும்.
விண்ணப்பங்களை பதிவேற்றுவதற்கான கட்டணத்தை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம், சென்னை என்ற பெயரில் டிடி யாக செலுத்த வேண்டும். நவம்பர் 11ம் தேதி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 30-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் பார்க்கலாம்.
0 comments:
Post a Comment