Wednesday, November 7, 2018


  • கியூரி அம்மையார் போலந்து நாட்டில் 1867 ஆம் ஆண்டு
    பிறந்தார். ஐந்து குழந்தைகள், இவரே இளையவர்.
    குடும்பத்தில் வறுமை. தமக்கைக் மருத்துவக் கல்வி
    பயில விரும்பினார். அதனால் மேரி, குழந்தைகளுக்குச்
    சிறப்புப் பாடம் சொல்லிக் கொடுத்தார்.
  •  செவிலிபோல்
    பணிவிடைகள் செய்தார். அதன்மூலம் பொருள்
    ஈட்டித் தம் தமக்கை கல்வி பயில உதவினார்.
  • மேரி, பிரான்சு நாடு சென்று கல்லூரியில் சேர்ந்தார்.
    தம் வாழ்வின் இலக்கான அறிவியல் கல்வியைப் 
    பயின்றார். அறிவியல் மேதை பியரி கியூரியை, மேரி
    திருமணம் செய்து கொண்டார். அவருடன் சேர்ந்து
    அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
  • அறிவியல் மேதை ஏ.எச்.பெக்காரல் என்பவருடன்,
    பியரி கியூரியும் மேரி கியூரியும் இயற்பியலில்
    ஆராய்ச்சியை மேற்கொண்டனர். கணவன் – மனைவி
    இருவரும் முதலில் பொலோனியம் என்னும் தனிமப்
    பொருளைக் கண்டுபிடித்தனர்.  மேலும்  இரண்டு
    ஆண்டுகளுக்கு பிறகு ரேடியம் என்னும் தனிமப் பொருளைக் 
    கண்டுபிடித்தனர்.
  • 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு
    பிரித்து வழங்கப்பட்டது. நோபல் பரிசு வரலாற்றில்
    பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரி ஆவார்.
  • தனியார் நிறுவனம் ஒன்று 50 லட்சம் டாலர்களுக்கு
    விலைக்கு வாங்க முன்வந்தது. ஆனால், தம்முடைய
    கண்டுபிடிப்பை அறிவியல் உலகத்துக்குக் கொடையாக
    வழங்கினார் கியூரி.
  • அவருடைய கணவர் விபத்தில் இறந்தபிறகு, பிரெஞ்சு
    அரசு, அம்மையாருக்கும் அவருடைய பெண்
    குழந்தைகள் இருவருக்கும் பொருளுதவி அளிக்க
    முன்வந்தது. ஆனாலும் மேரி, அதனை ஏற்க
    மறுத்தார்.
  • வேதியலில் ஆராய்ச்சிகள் பல செய்து, ரேடியத்தின்
    அணு எடையைக் கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு
    இரண்டாவது முறையாக 1911 ஆம் ஆண்டு 
    வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • அதன்பிறகு, பல பட்டங்களையும் பரிசுகளையும்
    பெற்றார்.
  • கியூரி அம்மையார் 1934 ஆம் ஆண்டு இயற்கை
    எய்தினார்.
தனது தாயின் ஆராய்ச்சிப் பணிகளைத் தொய்வின்றித் தொடர்ந்த ஐரின் பின்னாளில் செயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றார். தாயும், தந்தையும், மகளும் நோபல் பரிசு பெற்றது வரலாற்றில் கியூரி குடும்பத்திற்கு மட்டுமே கிடைத்த தனிப்பெருமையாகும். கியூரி தம்பதிகளின் அஸ்தி பாரிஸின் புகழ் பெற்ற 'பாந்தியன்' (Pantheon) அரங்கில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. வரலாற்றில் மிக முக்கியமானவர்களுக்கு பிரெஞ்சு தேசம் வழங்கும் உயரிய மரியாதை அது. ரேடியம் என்ற அரிய தனிமத்தை வேறொரு விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தால் அதனை வைத்து பெரும் பணம் சம்பாதிக்க எண்ணியிருக்கக்கூடும். ஆனால் வறுமையில் உழன்ற போதும் தனது கண்டுபிடிப்பை பணமாக்க எண்ணாத ஓர் உத்தம விஞ்ஞானிதான் மேரி கியூரி அம்மையார். பல புற்று நோயாளிகளின் உயிரைக் காக்க தன் உயிரையே பரிசாகத் தந்த அந்த அதிசய அம்மையாரின் வாழ்க்கை நமக்கு சொல்லும் செய்திகள் எளிதானதுதான்.

முதலாவது பிற்போக்கான சமுதாய எண்ணங்களை உதறித் தள்ளும் தன்னம்பிக்கை, இரண்டாவது வறுமையிலும் பிறர் நலம் நாடும் உயரிய சிந்தனை, மூன்றாவது இன்னல்களை தவிடு பொடியாக்கும் கடின உழைப்பு, நான்காவது சுயநலத்தைத் துறந்து பொதுநலத்திற்காக பாடுபடும் பண்பாடு. இந்த நற்பண்புகளை கடைபிடித்து விடாமுயற்சியோடு போரடியதால்தான் அவர் கனவு கண்டது போலவே அறிவியல் என்ற வானம் வசப்பட்டது. மேரி கியூரி அம்மையாரிடம் இருந்த இந்த நான்கு பண்புகளுமே நமக்கு ஒருசேர இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நான்கில் எதாவது ஒரு பண்பை கடைப்பிடித்து விடாமுயற்சியோடு போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.
  • ஒரே குடும்ப்பத்தைச்சேர்ந்தவர்கள் மூன்று நோபல் பரிசு
    பெற்ற இச்சாதனை இன்றுவரை எந்தக் குடும்பத்தினராலும்
    முறியடிக்கப்படவில்லை.

0 comments:

Post a Comment