பெண் செவிலியர்கள் சவுதி அரேபியாவில் வேலை பெறுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் டெல்லியில் நவம்பர் 11, 23ம் ேததிகளில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது.
சவுதி அரேபிய அமைச்சகத்தின் கிங் பாஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் பணிபுரிவதற்கு மூன்று வருட பணி அனுபவத்துடன் 34 வயதிற்குட்பட்ட பிஎஸ்சி/எம்எஸ்சி/பிஎச்டி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 19 முதல் 23ம் தேதி வரை புதுடெல்லியில் நடைபெற உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் எம்எஸ்சி செவிலியர்களுக்கு ₹90,000/- மற்றும் பிஎஸ்சி செவிலியர்களுக்கு ₹80,000/- அனுபவத்திற்கேற்றவாறு மாத ஊதியமும், இலவச விமான டிக்கெட், உணவு, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, போக்குவரத்து, 35 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவுதி அரேபிய அமைச்சகத்தின் சட்டத்திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.
எனவே, தகுதியுள்ள செவிலியர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் ஆதார் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் vemclmohsa2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் 9ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு 044-22505886/22502267 ஆகிய தொலைபேசி எண்களிலும் 8220634389/ 9566239685 என்ற செல் போன் எண்களிலும் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.
இந்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகார அமைச்சகத்தால் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அயல்நாட்டு நிறுவனத்தின் முகவர் எண் Rc.No.B-0821/CHENNAI/CORP/1000+/5/308/84 ஆகும். இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment