Monday, November 5, 2018



நெல்லை மாவட்டம் கூந்தன்குளத்தைச் சேர்ந்த கிராம மக்கள், பறவைகளின் நலன்கருதி கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளிகொண்டாடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கூந்தன்குளம் கிராம குளத்தில் செங்கால்நாரை, கூழைக்கடா, நத்தைகொத்திநாரை உள்ளிட்ட பறவைகள் உள்ளன. மேலும் சைபீரியா, மங்கோலியா போன்ற நாடுகளில் இருந்து பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் , செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, கொக்குகள், கரண்டி வாயன் என நீர்ப் பறவைகள் உட்பட 247 வகையான பறவை இனங்கள் இங்கு கூடுகட்டி இனப் பெருக்கம் செய்கின்றன. 

இதனால் 1994 முதல் வனத்துறை கூந்தன்குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் வரையிலும் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து, தங்கள் குஞ்சுகளுடன் சொந்த ஊர்களுக்கு செல்கின்றன. 

குளக்கரையில் மட்டுமல்லாது வீட்டின் மேலுள்ள கூரைகள், வீடுகளில் உள்ள மரங்களில் கூட பறவைகள் கூடு கட்டி வசிக்கின்றன. இதனால் பறவைகளின் நலன்கருதி, இப்பகுதி மக்கள், கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

0 comments:

Post a Comment