Tuesday, November 13, 2018




தலைவலி
தினசரி காலை பசு நெய் உருக்கி மூக்கின் இரு துவாரங்களிலும் 5 சொட்டுகள் வீதம் புதிய மை நிரப்பி (இங்க் பில்லர்) மூலம் 15 நாட்கள் தொடர்ந்து விடவும்.
(அல்லது)
இரு கடுக்காயை விதை நீக்கி 10 கிராம்பு தட்டி 1 1/2 டம்ளர் அளவு கொதிக்க வைத்து காலை மற்றும் இரவில் குடிக்கவும்.

மலம் கட்டுதல்
தினசரி இரவு சாப்பாட்டுக்குப் பிறகு 1/2 தேக்கரண்டி கடுக்காய்ப்பொடி சுடுதண்ணீரில் கலந்து சாப்பிடவும்.

மூலம்
தினசரி இரவு மாசிக்காயை நீர் விட்டு உரைத்து, ஆசனவாயில் 15 நாட்கள் பூசவும்.

தொடர் தும்மல், தூசி ஒவ்வாமை
ஒரு தேக்கரண்டி சுடுபாலில் சிறிது பட்டாணி அளவு பெருங்காயப் பொடி கலந்து துணியில் வடிகட்டி, இளம் சூட்டில்,  இரண்டு மூக்கு துவாரத்திலும் 4 சொட்டு வீதம் புதிய மை நிரப்பி (இங்க் பில்லர்) மூலம் ஊற்றவும்.
(அல்லது)
கற்பூரத்தில் 2 சொட்டு எண்ணெய் விட்டு (குழைத்து) மூக்கில் உறிஞ்சவும். நெற்றிப் பொட்டில் தேய்க்கவும்.

0 comments:

Post a Comment