Saturday, November 10, 2018

Image result for சர்காரில்
ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாக்கப்பட்டு தீபாவளி அன்று வெளியான சர்கார் படம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அரசியலில் பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகளை விமர்சித்து பல நேரடி வசனங்கள் இருப்பதாகவும், மக்களுக்கு வழங்கிய இலவசங்களை எரிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் சர்கார் படத்தில் இருந்து இந்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டது.
படத்தில் இருந்து என்னென்ன காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
நீக்கப்பட்ட காட்சிகள் இது தான்,
1. மிக்ஸி, கிரைண்டர் நெருப்பில் தூக்கி எரியப்படும் காட்சி
2. கோமளவல்லி என்ற உச்சரிப்பு வரும் போது கோமளா என்பது மியூட் செய்யப்பட்டுள்ளது
3. பொதுப்பணித்துறை மற்றும் 56 வருஷம் ஆகிய வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக 5 வினாடி காட்சி மட்டுமே படத்தில் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment