நாடும் நகரமும்
நாடு :
- நாடு என்னும் சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தைக்
குறிப்பதற்கு வழங்கப்பட்டது. - தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது.
- மூவேந்தர்களின் ஆட்சிக்கு உட்பட்ட தமிழ்நாட்டின்
பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு,
பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன. - நாளடைவில் முந்நாடுகளின் உட்பிரிவுகளும் நாடு
என அழைக்கப்பட்டன. கொங்குநாடு, தொண்டைநாடு
முதலியன இதற்குச் சான்றாகும். - முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த
நாடுகளுள் ஒன்று. இப்பொழுது, அப்பெயர்
பொருநையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின்
பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின்
மறுகரையில் உள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு
என்னும் பெயர் உடையது. - மாயவரத்திற்கு அணித்தாக உள்ள ஓரூர் கொரநாடு
என வழங்கப்படுகிறது. கூரைநாடு என்பதே கொரநாடு என
மருவிற்று, பட்டுக்கோட்டை வட்டத்தில் கானாடும்,
மதுராந்தக வட்டத்தில் தென்னாடும் உள்ளன.
நகரம் :
- சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயரால் வழங்கப்படும்
- நாட்டின் தலைமைசான்ற நகரம் தலைநகரம் எனப்படும்.
- ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம்
குருகூர் என்னும் பழம்பெயரைத் துறந்து,
ஆழ்வார்திருநகரியாக திகழ்கின்றது. - பாண்டி நாட்டிலுள்ள விருதுப்பட்டி, வாணிகத்தால்
மேம்பட்டு இன்று விருதுநகராக விளங்குகின்றது.
இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும்
பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன.
சென்னை :
- சென்னையின் பகுதிகளாக இன்று விளங்கும்
மயிலாப்பூரும் திருவல்லிக்கேனியும் கடற்கரைச்
சிற்றூர்களாக அந்நாளில் காட்சி அளித்தன. - மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரம் என்னும் சிவாலயம்
மிகப் பழைமை வாய்ந்தது. திருஞானசம்பந்தர் அதனைப்
பாடியுள்ளர். - திருமயிலைக்கு அருகே உள்ள திருவல்லிக்கேணி முதல்
ஆழ்வார்களால் பாடப் பெற்றது. அவ்வூரின் பெயர்
அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது
அல்லிக்குளம். - அல்லி மலர்கள் அழகுற மலர்ந்து கண்ணினைக்
கவர்ந்த கேணியின் அருகே எழுந்த ஊர் அல்லிக்கேணி
எனப் பெயர் பெற்றது. அங்கே பெருமாள், கோவில்
கொண்டமையால் திரு என்னும் அடைமொழி பெற்றுத்
திருவல்லிக்கேணி ஆயிற்று. - திருவல்லிக்கேணிக்கு வடக்கே மேடும்பள்ளமுமாகப்
பல இடங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று நரிமேடு.
புரம் :
- புரம் என்னும் சொல், சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும்.
- ஆதியில் காஞ்சி எனப் பெயர் பெற்ற ஊர் பின்னர்,
புரம் என்பது சேர்ந்து காஞ்சிபுரம் ஆயிற்று. - பல்லவபுரம், கங்கைகொண்ட சோழபுரம், தருமபுரம்
முதலியவை மேலும் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
பட்டினம் :
- கடற்கரையில் உருவாகும் நகரங்கள் பட்டினம் எனப்
பெயர் பெறும். - காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், காயல்பட்டினம்,
குலசேகரப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகியவை
பட்டினம் எனப் பெயர் பெற்ற ஊர்கள் ஆகும்.
பாக்கம் :
- கடற்கரைச் சிற்றூர்கள் பாக்கம் எனப் பெயர் பெறும்.
- பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், மீனம்பாக்கம்,
நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் இப்படிப் பாக்கம்
எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்.
புலம் :
- புலம் என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும்.
எடுத்துக்காட்டாக மாம்புலம், தாமரைபுலம், குரவைப்புலம்
முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
குப்பம் :
- நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் குப்பம்
என்னும் பெயரால் வழங்கப்பெறும். காட்டுக்குப்பம்,
நொச்சிக்குப்பம், மஞ்சக்குப்பம், மந்தாரக்குப்பம்,
முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
0 comments:
Post a Comment