குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளுக்கு இலவச டி.வி.டி. வழங்கும் திட்டத்தை குழந்தைகளுக்கான இந்திய திரைப்பட சமூகம் (சி.எஃப்.எஸ்.ஐ.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் சிஎஃப்எஸ்ஐ, குழந்தைகளுக்கான பிரத்யேக திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. இந்தத் திரைப்படங்கள் பொழுதுபோக்கு மட்டுமின்றி இளம் மனங்களில், நீதி போதனைகளை வளர்ப்பதற்கும் உதவுகின்றன.
குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளில் குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களை திரையிட வசதியாக இலவச டி.வி.டி.-க்களை சி.எஃப்.எஸ்.ஐ. வழங்கவுள்ளது. விருப்பமுள்ள பள்ளிகள் 044 -2498 1159 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment