*இன்றைய திருக்குறள்*
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
*மு.வ உரை*
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.
*கருணாநிதி உரை*
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது.
*சாலமன் பாப்பையா உரை*
தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.
✡✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
உலக வாழ்விற்குள் வந்து விட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் அடையாளத்தினை விட்டுச் செல்லுங்கள். எழுந்திருங்கள், உழையுங்கள் இல்லாவிட்டால் நாம் பூமியில் பிறந்ததில் ஒரு பயனும் இல்லை.
- சுவாமி விவேகானந்தர்
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*Important Words - Profession & Accupation*
Midwife பிரசவ மருத்துவச்சி
Milkman பால்காரர்
Miner சுரங்கத் தொழிலாளி
Minister மந்திரி
Musician இசைக்கலைஞர்
✍✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1. சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
15 ஆண்டுகள்
2.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
அலகாபாத்
3. பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
காரியம், களிமண்,மரக்கூழ்
4.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
70ஆயிரம் வகைகள்.
🧬🧬🧬🧬🧬🧬🧬🧬
*Today's grammar*
*Simple present tense*
*Rules*
1. I do a job
நான் செய்கின்றேன் ஒரு வேலை.
இந்த "I do a job" எனும் வாக்கியம் ஒரு சாதாரண நிகழ்கால வாக்கியமாகும். இதை ஆங்கிலத்தில் Simple Present Tense அல்லது Present Simple Tense என்று அழைப்பர்.
இந்த "Simple Present Tense"" சாதாரண நிகழ்காலச் சொற்களை எப்படி கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதை முதலில் பார்ப்போம்.
Subject + Auxiliary verb + Main verb
1. I/ You/ We/ They + __ + do a job.
2. He/ She/ It + __ + does a job.
இவ்வாக்கிய அமைப்புகளில் "Auxiliary verb" "அதாவது துணைவினை பயன்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
Auxiliary verb + Subject + Main verb
1. Do + I/ you/ we/ they + do a job?
2. Does + he/ she/ it + do a job.
📫📫📫📫📫📫📫📫
*அறிவோம் தமிழ்*
*அரைப்புள்ளி (;)*
ஓரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும். ஒரே எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் அரைப்புள்ளி இடவேண்டும்.
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*அன்பின் மதிப்பு*
அக்பர் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு பல நாட்களாகப் படுத்தப்படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல் மன்னனின் படுக்கையருகே சென்றான். அவனது கலைந்த தலைமுடியும் ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அக்பர் அறிந்து கொண்டார்.
அவன் மன்னனிடம் அரசே உங்கள் உடல்நிலை சரியாக வேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் வைத்து அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றான்.
அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப்போயிருந்தது. அரசனோ பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி அந்த விவசாயிக்கு பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.
மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர் அரசே கெட்டுப்போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு? என்று கேட்டார். மன்னனோ அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான்.
அவனது அன்பு உண்மையானது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலை கூட அவனது அன்புக்கு ஈடாகாது என்று கூறினான்.
நீதி :
நமது அன்பு உண்மையாக இருந்தால்இ கடவுளே கையைக் கட்டிக் கொண்டுஇ நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.
🧾🧾🧾🧾🧾🧾🧾🧾
*செய்திச் சுருக்கம்*
🔮மகாராஷ்டிராவில் அணை உடைந்த விபத்து - பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு.
🔮ஒடிசா மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று கோலகலமாகத் தொடங்கியது.
🔮கோயம்பேடு மெட்ரோ வளாகத்தில் 1.2 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி: தொடங்கி வைத்தார் அமைச்சர்.
🔮காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில்.
🔮வங்கி பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் எழுதலாம் : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
🔮யுரேனியம் செறிவுட்டுதலை தொடர்ந்தால் கடும் விழைவுகளை சந்திக்க நேரிடும்- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.

0 comments:
Post a Comment