என்னதான் வித்தியாசமான உடையுடன், விதவிதமான அணிகலன்களை அணிந்து வலம் வந்தாலும், ஒருவர் உடம்பிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் அவரைச்சுற்றி இருப்பவர்களை முகம் சுளிக்க வைத்துவிடும். தன்னிடமிருந்து வெளிபடும் துர்நாற்றத்தை மறைப்பதற்காகவே பெரும்பாலானவர்கள் வாசனைத் திரவியங்களை உபயோகபடுத்துகின்றனர். வெயில் காலத்தில் இதனுடைய பயன்பாடு இன்னும் அதிகரிக்கும். சிலரிடம் துர்நாற்றம் இல்லையென்றாலும், தன்னைச் சுற்றி உள்ளவர்களை வாசனையால் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
வாசனைத் திரவியத்தின் வரலாற்றை பார்க் கும்போது மலைப்பு தோன்றுகிறது. பழங் காலத்தில் இருந்தே உலகமெங்கிலும் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தபட்ட தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், முதன்முதலில் வாசனைத் திரவியங் களை பயன்படுத்திய பெருமை எகிப்தையே சேரும். பழம்
பெரும் மருத்துவ முறையான ஆயூர்வேதத்தில் `அத்தர்’ வாசனைத் திரவியமாகக் குறிப்பிடபட்டுள்ளது.
பார்ட்டிகள், விழாக்கள், மீட்டிங்குகளுக்குச் செல்லும்போது மட்டும்தான் வாசனைத் திரவியங்களை பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. அதேபோல் இன்னார்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுபாடும் கிடையாது. அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களை யார், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சிலர் எளிதில் தூங்குவதற்காக இரவில் தூங்கபோதும் முன்னர் மென்மையான வாசனை வீசும் திரவியங்களை பூசிக் கொள்வர். பொதுவாக வாசனைத் திரவியங்கள் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. இதனால் தாழ்வு மனபான்மை இல்லாமல் சந்தோஷமாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக்கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராகக் காட்டுகிறது. தன்னம்பிக்கைடன் செயல்பட முடிகிறது.
ஆண், பெண் இருவருமே வாசனைத் திரவியங்களை பயன்படுத்துகின்றனர். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பயன்படுத்துவதைம் காண முடிகிறது. குறிப்பாக இளவயதினர்களிடையே வாசனைத் திரவியங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இளவயது ஆண், பெண் இருவருமே தங்களது எதிர்பாலினர்களைக் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்துகின்றனர். இயற்கையான நறுமண பொருட்களில் இருந்து தயாரிக்கபடுபவை, செயற்கையாக உருவாக்கபடுபவை என இரண்டுவிதமான வாசனைத் திரவியங்கள் உள்ளன.
விதவிதமான வாசனைகளில், கலர்களில் வாசனைத் திரவியங்கள் கிடைக்கின்றன. இவை அடைத்து விற்கபடும் பாட்டில்களும், அவற்றின் முடிகளும் பல்வேறு டிசைன்களில் காணபடுகின்றன. ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனி வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதேபோல் பாரம்பரிய முறை, நவீன முறை என இரண்டு விதமான முறைகளில் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கபடுகின்றன.
வகைகள்
பூளாரல்: நறுமணம் தரக்கூடிய பூக்களில் தயாரிக்கபடுபவை. இவற்றை பயன்படுத்தும்போது ஒருவிதமான `ரொமான்ஸ்’ உணர்வு உண்டாகும்.
புருட்டி: பழங்களின் சாற்றில் இருந்து தயாரிக்கபடுபவை.
ஓசியானிக்: கடலில் உள்ள பொருட்களால் தயாரிக்கப்படுபவை. இவற்றில் ஸ்ட்ராங், மைல்டு என இரு வெரைட்டிகள் உண்டு.
க்ரீன்ஸ்: மரங்களின் வேர்கள், இலைகள், விதைகள் ஆகியவற்றில் தயாரிக்கபடுபவை. இளவயதினர்களுக்கு ஏற்றது. டின்னர் பார்ட்டிகளுக்கு பயன்படுத்தலாம்.
ஓரியண்டல்: வெண்ணிலா போன்ற ப்ளேவர்களில் தயாராகும் வாசனைத் திரவியங்கள். மாலைநேர பார்ட்டிகளுக்கு உகந்தது.
உட்டி: சந்தனம், ரோஸ் உட் போன்றவற்றில் தயாரிக்கபடுபவை.
வெயில் காலங்களில் லேசான வாசனைத் திரவியங்களைம், குளிர்காலங்களில் `ஹெவி’யான வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலானவர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் அல்லது நடிகை என்ன வாசனைத் திரவியத்தை பயன்படுத்துகிறார்களோ, இவர்களும் அதையே உபயோகிக்கிறார்கள். இயற்கையான நறுமண பொருட்களில் மட்டுமின்றி, கெமிக்கல்ஸ், ஆயில், ஆல்கஹால் போன்றவற்றில் இருந்தும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கபடுகின்றன. டி.வி. மற்றும் பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்களே வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றன. பிரபல கம்பெனிகளின் தயாரிப்புகள் சற்று விலை அதிகமாக இருக்கும்.
உடலில் பூசிக்கொள்பவை, உடையில் பூசிக்கொள்பவை என இரண்டுவிதமான வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு எது உகந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உடலில் பூசும் வகையிலான வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும்போது அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களாக பார்த்து பயன்படுத்த வேண்டும்.
உடலில் பூசிக்கொள்பவை, உடையில் பூசிக்கொள்பவை என இரண்டுவிதமான வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு எது உகந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உடலில் பூசும் வகையிலான வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும்போது அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களாக பார்த்து பயன்படுத்த வேண்டும்.
வாசனைத் திரவியங்களை பொறுத்த வரையில் பாட்டிலில் இருக்கும்போது ஒருவிதமான வாசனையும், உடலில் பூசிக்கொண்டபின் வேறுவிதமான வாசனையும் உண்டாகும். எனவே, வாங்கும்போதே உடைகளில் சிறிது தெளித்து முகர்ந்து பார்த்து வாங்க வேண்டும். சிலவற்றில் பூசிக்கொண்டதும் வாசனை தோன்றாமல், சிறிது நேரம் கழித்தே தோன்றும். இதுபோன்ற வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
ராசிகளும், வாசனைகளும்
மேஷம் – எலுமிச்சை, புதினா
ரிஷபம் – லாவண்டர், சந்தனம்
மிதுனம் – பழங்கள்
கடகம் – ரோஸ், லில்லி
சிம்மம் – ஆரஞ்ச், புதினா, சந்தனம்
கன்னி – சந்தனம், ரோஸ் உட்
துலாம் – ஓரியண்டல்
விருச்சிகம் – பூக்கள்
தனுசு – ஓசியானிக்
மகரம் – ஓரியண்டல், மல்லிகை, ரோஸ்
கும்பம் – பழங்கள்
மீனம் – ஓசியானிக், க்ரீன்ஸ்
பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும்போது, முடிகளின் மீது படாதவாறு கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அதில் உள்ள ஆல்கஹால் முடிகளின் மீது பட்டால் நரைத்து விடும். பயன்படுத்திய பின் பாட்டில்களை காற்று புகாதவாறு இறுக்கமாக முடி வைக்கவும். சூரிய ஔ நேரடியாக படாதவாறு வாசனைத் திரவியங்களை பத்திரபடுத்த வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட வாசனைத் திரவியங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டாம். அளவோடு பயன்படுத்த வேண்டும். அதிகமாக உபயோகிக்கும் பட்சத்தில் சரும பாதிப்புகள் ஏற்பட வாய்புண்டு.
வாங்கும்போது கடை பிடிக்க வேடியவை வாசனைத் திரவியங்களை வாங்கும் முன், மணிக்கட்டின் மீது சிறிதளவு தெளித்து பாருங்கள். சிறிது நேரம் கழித்து அலர்ஜி எதுவும் ஏற்படவில்லையென்றால், அதை வாங்கலாம். அலர்ஜி ஏற்படும் பட்சத்தில் வேறொன்றை பரிசோதிபது நல்லது. அந்தந்த சீசனுக்கேற்ப மைல்டானது, ஹெவியானது என பிரித்து வாங்குங்கள். விலை அதிகமாக இருந்தாலும் தரமான பிராண்டட் வாசனைத் திரவியங்களை மட்டும் வாங்குங்கள். அவைதான் சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும். ஆல்கஹால் அதிகமாக உள்ளவை, குறைவாக உள்ளவை என இரண்டு வெரைட்டிகள் உள்ளன. உங்கள் சருமத்திற்குச் சிறந்தது எது என்பதை பார்த்து வாங்குங்கள்.
0 comments:
Post a Comment