Tuesday, July 9, 2019


👉TN Schools attendance app தற்போதைய வெர்ஷனை அப்டேட் செய்து, தலைமை ஆசிரியருக்கான(17 இலக்க எண், user name ஆகவும், தலைமை ஆசிரியரின் அலைபேசி எண் Pass word) Log in வழியாக உட்புகவும்.

👉ஒரு ஆசிரியர் இன்று விடுப்பில் இருந்தால், அவர் பெயருக்கு நேராக உள்ள P என்பதை தொட்டால், *P*, *A* *L* என்ற மூன்று எழுத்துக்கள் தோன்றும்.

👉P என்பது Present என்பதையும்,
     A என்பது Absent என்பதையும்,
    L என்பது விடுப்பையும் குறிக்கும்.

👉L என்பதை தேர்வு செய்து, எந்த வகை விடுப்பு அல்லது OD என்பதை பதிவு செய்து,

👉 மற்றவர்களுக்கு P என்ற நிலையில் சமர்ப்பிக்கவும்.

👉அடுத்த நாள், விடுப்பிலிருந்த ஆசிரியர் பணிக்கு வந்திருந்தால், இந்த செயலியில் விடுப்பு எனக் காட்டும்.

👉 இந்த சூழலில், செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று, Students DATA அருகில் உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியை தொடவும்( update செய்ய).

👉அதன் பின் கேட்கப்படும் தகவலுக்கு Ok என்பதை தொடவும்.

👉இதன் பின் fetching
மற்றும் configuring  ஆகும்.

👉இதன் பின், ஆசிரியர்கள் ஐகானை தேர்வு செய்து, ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

👉தலைமை ஆசிரியர் விடுப்பில் இருந்தால், பொறுப்பு தலைமை ஆசிரியர் தன்னுடைய கைபேசியில் உள்ள Attendance செயலியில் Log Out செய்து, தலைமை ஆசிரியரின் 17 இலக்க அடையாள எண் மற்றும் கடவுச்சொல் வழியாக Login செய்து,

👉 ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர் விடுப்பில் இருக்கும் போது, அவர் Log Out செய்த பின், பொறுப்பு தலைமை ஆசிரியர் Log in செய்ய வேண்டும்.

0 comments:

Post a Comment