தேவையான பொருட்கள்:
நாட்டுக் கோழி - அரை கிலோ
நறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன்
சோம்பு - கால் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கிராம்பு - 2 பட்டை - 2 - தாளிக்க
மல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
முதலில் நாட்டுக் கோழியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட். மஞ்சள் தூள் உப்பு 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்
பின் கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளித்து, அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து, அனைத்து மசலா தூள்களையும் சேர்த்து நன்கு கிளர வேண்டும்.
தண்ணீர் நன்கு வற்றியதும் , மல்லி இலை தூவி இறக்கவும்.சுவைாயன மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் ரெடி
அருமை
ReplyDelete