Wednesday, July 31, 2019

......................................
முதல்வராக இருந்தபோது வழக்கம் போல காமராசர் தன் அன்னையைப் பார்க்க வந்தார்.
அப்போது குற்றால சீசன் என்பதால் அப்படியே குற்றாலம் சென்றார்.

நன்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு அருவிக்குச் சென்றார்.அருவியில் தண்ணீர் அருமையாக விழுந்து கொண்டு இருந்தது.ஆனால், மக்கள் யாரும் இல்லை.

அதிர்ச்சியான காமராசர்," என்னப்பா யாருமே இல்லை; கூட்டம் ஒன்னையும் காணோமே" என்றாராம். பாதுகாவலர்கள்," ஐயா, முக்கியஸ்தர்கள் குளிக்கும் போது பொது மக்களுக்கு அனுமதி கிடையாது.இது வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து வரும் நடைமுறை ஐயா" என்றார்களாம்.

கோபப்பட்ட காமராசர், இப்ப நடக்கிறது வெள்ளைக்காரன் ஆட்சியில்லை. ஐனநாயக மக்களாட்சி. போய்யா, போய் பொதுமக்களை சுதந்திரமாகக் குளிக்க அனுப்பி வை " என்றாராம்.

மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு குளிக்க வந்தார்களாம்.அப்போது எடுத்த போட்டோ இது.

இந்த படத்தைப்பார்க்கும்போது இன்றைய ஆட்சியாளர்கள் மக்களைப்படுத்தும் பாடு மனதில் ஒரு கணம் வந்து போகிறது...

0 comments:

Post a Comment