நீட் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து மாணவர்களையும் பயிற்சிக்கு கட்டாயமாக அனுப்பிவைக்கவேண்டும்
நீட் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து மாணவர்களையும் பயிற்சிக்கு கட்டாயமாக அனுப்பிவைக்கவேண்டும் என்று புதுக்கோட்டையில் நடைபெற்ற தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது: நிர்ணயிக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்ட காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக தற்காலிக அடிப்படையில் ரூபாய் 7500 மாத ஊதியத்தில் தகுதி வாய்ந்தோரிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று நியமனம் செய்து கற்றல்,கற்பித்தல் செயல்பாடுகள் சிறப்பாக செயல்பட சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.வருகிற 01-12-2018(சனிக்கிழமை)அன்று நடைபெற இருக்கும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித்திட்டதேர்விற்கு (NMMS)விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை நாளை03-10-2018(புதன்கிழமை)பிற்பகல் முதல் வருகிற 17-10-2018வரை www.dge.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.ரயில்வே போன்ற போட்டித்தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற வசதியாக பல்வேறு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டலைச்செய்யவேண்டும்.இன்றைய நிலையில் ஒரு சில மாணவர்களை உளவியல் ரீதியாக நல்வழிப்படுத்தும் பெரும் பொறுப்பு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ளது. அந்த வகையில் உளவியல் ரீதியாக ஆலோசனைகள் தேவைப்படும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நமது மாவட்ட கல்வித்துறையின் உளவியல் ஆலோசகர் நிர்மல்குமார் அவர்களை தொடர்புகொண்டு மாணவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்.அவ்வப்போது அறிவிக்கப்படும் போட்டிகளுக்கு மாணவர்களை ஆர்வமூட்டி உற்சாகமூட்டி அதிக அளவில் பங்கேற்க செய்யவேண்டும்.மன்ற செயல்பாடுகள்,இணைச்செயல்பாடுகள்,மாஸ்ட்ரில்,கழிவறைப்பயன்பாடு,குடிநீர்பயன்பாடு ஆகியவை பள்ளிகளில் சிறப்பாக நடைபெறுவதை தலைமையாசிரியர்கள் உறுதிசெய்யவேண்டும்.அரசு உத்தரவுப்படி சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விவரங்களை ஒவ்வொரு நாளும் காலை 11.00 மணிக்குள் கட்டாயமாக குறுந்தகவல் அனுப்பவேண்டும். செயற்கைக்கோள் வாயிலாக அரசால் வழங்கப்படும் நீட்,ஜே.இ.இ பயிற்சி மிகவும் சிறப்பாக உள்ளது.இத்தகைய சிறப்பு வாய்ந்த நீட்,ஜே.இ.இ, பயிற்சிக்கு தேர்வாகியுள்ள அனைத்து மாணவர்களையும், கட்டாயமாக உரிய பயிற்சி மையத்திற்கு பயிற்சி நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அனுப்பிவைக்கவேண்டும். பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச்செயலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் சுய பாதுகாப்புக்கு உதவும் கராத்தே,சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்க ஊக்குவித்தல் வேண்டும்.தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேடு அனைத்துப்பள்ளிகளிலும் பயன்பாட்டில் வைத்திருக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை கே.அண்ணாமலை ரஞ்சன், அறந்தாங்கி(பொ) கு.திராவிடச்செல்வம்,இலுப்பூர் க. குணசேகரன்,அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் (மேல்நிலை)ஆர்.ஜீவானந்தம்,(உயர்நிலை)ஆர்.கபிலன்,அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்,பள்ளித்துணை ஆய்வாளர்கள் புதுக்கோட்டை வி.ஆர்.ஜெயராமன்,இலுப்பூர்(பொ)கி.வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை கே.அண்ணாமலை ரஞ்சன், அறந்தாங்கி(பொ) கு.திராவிடச்செல்வம்,இலுப்பூர் க. குணசேகரன்,அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் (மேல்நிலை)ஆர்.ஜீவானந்தம்,(உயர்நிலை)ஆர்.கபிலன்,அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்,பள்ளித்துணை ஆய்வாளர்கள் புதுக்கோட்டை வி.ஆர்.ஜெயராமன்,இலுப்பூர்(பொ)கி.வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment