மனிதர்கள் செய்தி வாசிப்பதை ஒரு தொழில்நுட்பம் செய்ய முடியும் என்பதை தொழில்நுட்பம் மூலம் மெய்பித்துள்ளது.
சின்கியா எனும் ஒரு தனியார் நிறுவனம் மெய்நிகர் செய்தி வாசிப்பாளரை உருவாக்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை சீனாவின் தேடுபொருள் இன்ஜின் நிறுவனமான சோகோ(sogou) வடிவமைத்துள்ளது.
இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் செய்தி வாசிப்பவர்களின் உடல்மொழி, உதட்டு அசைவு, மொழி உச்சரிப்பு ஆகியவற்றை எல்லாம் ஆராய்ந்து அதை வைத்து அச்சு அசலாக தானாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் மொழியை பதிவு செய்து விட்டால் அது தானாக பேசி விடுகிறது.
இந்த செய்திவாசிப்பாளரைக் கண்டால் நிஜம் எது பொய் எது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தத்ரூபமாக உள்ளது.
சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்த மெய்நிகரி பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment