Friday, November 2, 2018



மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள பிரமாண்ட பிரமிடுகளில் ஆராய்ச்சியாளர்கள் பெரிய சுரங்க பாதைகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள். மெக்சிகோவில் இருக்கும் பிரமிடுகள் பல விதமான புதிர்களை கொண்டு இன்னும் மர்மத்துடன்தான் இருக்கிறது. இங்கு என்ன மாதிரியான வாழ்க்கைமுறை பின்பற்றப்பட்டது, மக்கள் எப்படி இவ்வளவு பெரிய பிரமிடுகளை கட்டினார்கள் என்று இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. அங்கு வாழ்ந்த மக்களை டியோட்டி ஹூக்கான் மக்கள் என்று அழைக்கிறார்கள். இங்கு இருக்கும் பிரமிட் ஆப் சன் மற்றும் பிரமிடு ஆப் மூன் (pyramid of the sun and moon) இரண்டிற்கும் அருகில் 2 லட்சம் மக்கள் வசித்து இருக்க வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

0 comments:

Post a Comment