Thursday, December 13, 2018


டிசம்பர் 13 (December 13) கிரிகோரியன் ஆண்டின் 347 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 348 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 18 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியில் இருந்து விலகினார். இவர் ஐந்து மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.
1577 – சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.
1636 – வட அமெரிக்காவில் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம் பெக்கோட் பழங்குடியினரில் இருந்து பாதுகாக்கவென மூன்று துணைப்படைகளை அமைத்தது.
1642 – டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். இவரே நியூசிலாந்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.
1758 – வில்லியம் கோமகன் என்ற ஆங்கிலேயக் கப்பல் வடக்கு அத்திலாந்திக் கடலில் மூழ்கியதில் 360 பேர் உயிரிழந்தனர்.
1867 – இலண்டன், கிளெர்க்கென்வெல் என்ற இடத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
1888 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.[1]
1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீனாவின் நாஞ்சிங் நகரம் சப்பானிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
1938 – பெரும் இன அழிப்பு: செருமனியின் ஆம்பர்கு நகரில் நியூவென்காம் வதை முகாம் திறக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் கலவ்ரித்தா என்ற இடத்தில் செருமனியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 1,200 கிரேக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 710 போர் விமானங்கள் செருமனியின் கீல் நகர் மீது தாக்குதலை நடத்தின.
1949 – இசுரேலின் சட்டமன்றம் நாட்டின் தலைநகரை எருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.
1959 – பேராயர் மூன்றாம் மக்காரியோசு சைப்பிரசின் முதலாவது அரசுத்தலைவரானார்.
1960 – எத்தியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி பிரேசிலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, அவரது மெய்ப்பாதுகாவலர்கள் தலைநகரைக் கைப்பற்றி இளவரசர் அசுபா வோசனைப் பேரரசராக அறிவித்தனர். ஆனாலும் இந்த இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது.
1972 – அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், அரிசன் சிமித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.
1974 – மால்ட்டா நாடுகளின் பொதுநலவாயத்தின் கீழ் குடியரசானது.
1977 – அமெரிக்காவின் ஏர் இந்தியானா விமானம் வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.
1981 – போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1982 – தென்மேற்கு ஏமனை 6.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 2,800 பேர் உயிரிழந்தனர், 1,500 பேர் காயமடைந்தனர்.
1988 – பலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார்.
1996 – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.
2001 – இந்திய நாடாளுமன்றக் கட்டடம் சன்சத் பவன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – ஈராக் போர்: முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
2004 – முன்னாள் சிலி சர்வாதிகாரி அகஸ்தோ பினோசெட் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
2006 – ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2011 – பெல்ஜியத்தில் நத்தார்ச் சந்தை ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 125 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1780 – ஜோகன் தோபரீனர், செருமானிய வேதியியலாளர் (இ. 1849)
1805 – யோகான் வான் இலாமாண்ட், இசுக்காட்டிய-செருமானிய வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1879)
1816 – வெர்னர் வொன் சீமன்சு, செருமானிய பொறியியலாலர், தொழிலதிபர் (இ. 1892)
1903 – எல்லா பேக்கர், அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. 1986)
1904 – வில்லியம் அண்டர் மெக்கிரியா, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1999)
1908 – எலிசபெத் அலெக்சாந்தர், பிரித்தானிய அறிவியலாளர் (இ. 1958)
1926 – செ. குப்புசாமி, தொழிற்சங்கத் தலைவர் (இ). 2013
1928 – ஈழத்துப் பூராடனார், ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் (இ. 2010)
1944 – வ. ஐ. ச. ஜெயபாலன், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர், நடிகர்
1952 – லட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1954 – ஹர்ஷ் வர்தன், இந்திய மருத்துவர், அரசியல்வாதி
1955 – மனோகர் பாரிக்கர், இந்திய அரசியல்வாதி
1960 – வெங்கடேஷ், தெலுங்குத் திரைப்பட நடிகர்
1963 – டி. டி. வி. தினகரன், தமிழக அரசியல்வாதி
1981 – ஏமி லீ, அமெரிக்கப் பாடகர்
1989 – டேலர் ஸ்விஃப்ட், அமெரிக்கப் பாடகி, நடிகை
1990 – ரெஜினா கஸ்ஸாண்ட்ரா,தென்னிந்திய நடிகை

இறப்புகள்

1048 – அல்-பிருனி, பாரசீகக் கணிதவியலாளர் (பி. 973)
1557 – டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1499)
1784 – சாமுவேல் ஜோன்சன், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1709)
1849 – ஒப்மான்செக், செருமானிய தாவரவியலாளர் (பி. 1766)
1935 – விக்டர் கிரின்யார்டு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1871)
1944 – வசீலி கண்டீன்ஸ்கி, உருசிய-பிரான்சிய ஓவியர் (பி. 1866)
1961 – அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ், அமெரிக்க ஓவியர் (பி. 1860)
1984 – ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம், இலங்கைத் தமிழ் மனித உரிமை ஆர்வலர்
1986 – எல்லா பேக்கர், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1903)
1987 – நா. பார்த்தசாரதி, தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (பி. 1932)
2009 – பவுல் சாமுவேல்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1915)
2010 – திமிலை மகாலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1938)
2010 – ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்க ஊடகவியலாளர் (பி. 1941)
2010 – என்ரீக்கே மொறேந்தே, எசுப்பானிய பாடகர் (பி. 1942)
2012 – கர்ணன், தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்
2015 – அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1954)
2016 – வே. சுப்பிரமணியம், ஈழத்து எழுத்தாளர், நாடகாசிரியர், வரலாற்றாய்வாளர்

சிறப்பு நாள்

குடியரசு நாள் (மோல்ட்டா, 1974)

0 comments:

Post a Comment