குடும்ப உறவுகள் என்பது நமக்கு அன்பையும், பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தையும் தரக் கூடியவை. உறவுகள் அருகில் இருக்கும்போது அதன் அருமை பலருக்கும் புரிவதில்லை. கோபதாபங்களுடன் சற்றுவிலகும்போதுதான் அவை தரும் வெறுமையை உணர்வார்கள்.
நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகளை அரவணைத்துச் செல்வது என்பது பெரிய விசயம். ஆனாலும் அதை செய்துதான் ஆக வேண்டும். அதிலும் குறிப்பாக குடும்ப உறவுகளை பாதுகாப்பது என்பதுநம்முடைய கடமைகளில் ஒன்று. ஏதோ ஒரு நேரத்தில் எதற்காகவோ நம்மையும் அறியாமல்கோபப்பட்டு பேசிவிடும்போது உறவுகள் சிதைக்கப்படுகின்றன. அப்போது மற்றவர்களின் மனதில்நம்மைக் குறித்த அவநம்பிக்கை ஏற்படுகிறது. நாளடைவில் அது விரிசல் அடைந்து குடும்ப உறவுகளைப்பாதிக்கிறது.
விரிசல் அடைந்த உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்ளவும், நெருக்கமாக இருக்கும் உறவுகள் விரிசல்ஆகாமல் இருக்கவும் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் கைகொடுக்கும்என்கிறார்கள் மனநல வல்லுநர்கள்.
விழா நாட்களில் உறவினர்கள் ஒன்று சேரும்போது, உறவுகள் புதுப்பிக்கப்படுகின்றன. அத்தருணங்களில் பரிமாறிக் கொள்ளப்படும் பரிசுகள், நாம் அவர்களை முக்கியமானவர்களாகக்கருதுகிறோம் என்பதற்கு சாட்சிகளாகின்றன.
பரிசுகள் சிறியவையாக இருந்தாலும் அவை பெரிய அளவில் அன்பை வெளிப்படுத்தும். பரிசுகள்மூலம் அன்பு புதுப்பிக்கப்படல் வேண்டும். இதனால் மன வேற்றுமைகள் அகலும்; ஒற்றுமை பலப்படும்.வயதிற்கு ஏற்ப ‡ நம் தகுதிக்கு ஏற்ப பரிசுகள் வாங்கித் தந்து பிறரை மகிழ்விக்கலாம்.
பிறரை மகிழ்விப்பது இறைக் குணங்களுள் ஒன்று. அத்தகைய குணம் நம்மிடம் இருக்குமானால் எல்லாநலன்களும் நமக்குக் கிட்டும்.
சிலர் வயதாகிவிட்டால் இக்கொண்டாட்டங்களை தவிர்க்கப் பார்க்கிறார்கள். ஆனால், முதுமையில் கொண்டாடுவதே உறவுகளை இணைக்கும் ஆத்மார்த்த பாச நிகழ்வுகளாக இருக்கும்.
""வயதில் மூத்தவர்களை மதிப்பதில்லை'' என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கும் விதத்தில்அவர்களுக்காகவாவது இத்தகைய வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்.
பிரபலங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக பிறந்த நாள் நிகழ்ச்சிகளைநடத்துகின்றனர். அதிலும் சிலர் பணத்தையும் கரந்து விடுகின்றனர். இவற்றை நியாயப்படுத்திப்பேசுவோர் தன் வீடடிலுள்ள உறவுகளின் பிறந்த நாளை கொண்டாடுவது வீண் செலவு என்றுநினைக்கிறார்கள்.
""ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அலங்கோலப்படுத்திவிடும்'' என்று சொன்ன காந்தி மகான் ""குடும்பம் குதூகலமாக இருக்க, நட்பு நலமாக இருக்க உங்களால்முடிந்த பரிசுகளை மற்றவர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்துங்கள். அது உங்கள் அன்பின் வெளிப்பாடு. அந்த பரிசு உள்ளவரை உங்கள் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்தும். அது உங்களிடையேயானமனக்கசப்புகளை அகற்றி உறவை மகிழ்விக்கும் சக்தி படைத்தது'' என்று கூறினார். அது மட்டுமல்லாதுஅன்போடு பிறர் அவருக்குத் தந்த பரிசுகளை அது எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் அதை அவர்பாதுகாத்து பரிசு கொடுத்தவர்களின் அன்பை கெளரவப்படுத்தியிருக்கிறார்.
பரிசுப் பொருட்களை நாம் நினைத்த நேரத்தில் தர இயலாது. அதற்கென ஒரு தருணம்வரும்போது கொடுத்து மகிழ்வதே அதன் சிறப்பு. அதற்காகவே நாம் சில முக்கிய தினங்களைக்கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. பரிசுப் பொருட்கள் நம் ஆடம்பரத்தை வெளிப்படுத்துவதற்காக அன்று. நம் அன்பை வெளிப்படுத்துவதாக இருந்தால் மட்டும் போதும்.
குடும்ப மகிழ்ச்சிக்காக கடினமாக உழைக்கிறோம் நாம். ஆனாலும் மகிழ்ச்சி ஏதோகாரணங்களினால் தடைபட்டுப் போகின்றது. அத்தகைய நேரங்களில் அன்புப் பரிசுகள் நம் உறவுகள்இழந்த மகிழ்ச்சியை மீட்டுத் தரும்.
நல்ல குடும்பத்தை வடிவமைக்கவும் இந்த எளியமுறை பயன்படுகிறது. குறிப்பாகப் பெண்கள்பரிசுக்காக ஏங்குவார்கள். அவர்களை மகிழ்வித்து உற்சாகப்படுத்துவதற்கென்றே நிறைய பரிசுகள் எல்லாவிலைகளிலும் உள்ளன. கொடுத்து மகிழ்வித்து மகிழுங்கள். பிறருக்கு எந்த மாதிரி பரிசுப் பொருட்கள்பிடிக்கும் என்பதைத் தெரிந்து, அதைக் கொடுப்பதே முக்கியம்.
0 comments:
Post a Comment