Monday, December 17, 2018

புதுக்கோட்டை,டிச.16: ஜனவரி  7 ஆம் தேதிக்குள் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ந.ரெங்கராஜன் பேசினார்.

 புதுக்கோட்டையில் ஜாக்டோ ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் உயர்நீதிமன்ற நிகழ்வுகள் குறித்த விளக்க கூட்டம் இராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் கு.மா.திருப்பதி வரவேற்றுப் பேசினார்.

 ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.ரெங்கசாமி,க.சு.செல்வராஜ்,மு.ராஜாங்கம்,வி.எம்.கண்ணன்,ஆ.செல்லத்துரை, புகழேந்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஆ.மதலைமுத்து,மன்றம் நா.சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் கலந்து கொண்டு மாநில ஒருங்கிணைப்பாளர் ந.ரெங்கராஜன் பேசியதாவது: ஜனவரி 5 ஆம் தேதிக்குள் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.அப்படி இல்லை எனில் நீதிமன்றமே தலையிட்டு அதற்குரிய ஆணையை பிறப்பிக்கும் என நீதியரசர்கள்  வாக்குறுதி அளித்துள்ளார்கள்.எனவே ஜனவரி 7 ஆம் தேதி வரை  போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம்..நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது போராடுவது நியாயமாக இருக்காது..எனவே ஜனவரி 7 ஆம் தேதி நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைக்கவில்லை எனில் போராட்டத்தை தவிர வேறுவழியில்லை..காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்     தொடர்ந்து  திட்டமிட்டமிட்டபடி நடைபெறும்.எனவே தமிழக அரசு எங்களின் கோரிக்கைகளான  புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும்,21 மாத நிலுவைத் தொகை வழங்கப் பட வேண்டும்,மதிப்பூதியம்,தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோவின் 7 அம்ச  கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாநில,மாவட்ட ஒன்றிய பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்,அரசுப் பணியாளர்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர் கோ.சக்திவேல் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment