Friday, December 14, 2018

                 
ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களுக்கு கதை ஒன்றை சொல்லத் தொடங்கினார்.

ஏராளமான பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலில் சுற்றுலா சென்ற பயணிகள் கப்பல் ஒன்று விபத்தை சந்தித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கப்பல் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது. மக்கள் அங்குமிங்கும் ஓடி தங்களை காப்பாற்றிக் கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தனர்.

கப்பலில் இருந்த மக்கள் அங்கிருந்த  உயிர்காப்புப் படகில் ஏறி தப்பிச் செல்ல முயன்றனர். அந்த படகில் மொத்தம் 100 பேர் தான் பயணம் செய்ய முடியும். ஆனால் அதில் 110 நபர்கள் ஏறிவிட்டனர். கப்பல் மூழ்கிக் கொண்டிருந்தது. இப்போது கப்பலில் கடைசியாக ஒரு கணவன் அவர்  மனைவி தவிர அனைவரும் படகில் ஏறிவிட்டனர்.

அந்த இருவரும் படகில் ஏறினால் படகு மூழ்கி விடும். இருவரில் ஒருவர் வேண்டுமானால் ஏறலாம் என்ற நிலை. முன்னால் நின்ற மனைவி பின்னால் நின்ற கணவனை திரும்பிப் பார்த்தாள். கணவன் எதையும் யோசிக்காமல் மனைவியை பின்னுக்கு தள்ளி விட்டு படகில் ஏறிக்கொண்டார்.

மூழ்கிக் கொண்டிருந்த கப்பல் மனைவியோடு சேர்ந்து மூழ்கியது. அப்போது மனைவி சத்தமாக ஏதோ சொன்னாள். கடலின் இரைச்சல் மற்றும் கப்பலில் இருந்த ஆட்களின் சத்தத்தால் மனைவி சத்தமாக கத்திச் சொன்ன வார்த்தைகள் கணவனுக்கு கேட்கவில்லை. அவள் சொன்ன வார்த்தைகள் யார் காதிலும் விழவில்லை. மனைவி நீரில் மூழ்கிப் போனாள்.

ஆசிரியர் கதையை நிறுத்தி கடலில் மூழ்கிக் கொண்டிருந்த போது மனைவி என்ன சொல்லியிருப்பாள் என்று கேட்டார்.

மாணவர்களில் பெரும்பாலோர், "நான் உன்னை வெறுக்கிறேன்!" அல்லது "நீ என்னை ஏமாற்றி விட்டாய்!" என்று கூறியதாய் கூறினர்.

ஒரு மாணவன் மட்டும் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ஆசிரியர் அவனிடம் போய் அவனது பதிலை கேட்டார்.

அவன் அமைதியாக “ நம் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் “ என்று கூறியிருப்பார் என்றான்.

ஆசிரியருக்கு ஒரே ஆச்சரியம்.

“இந்த கதையை இதற்கு முன் கேட்டிருக்கிறாயா?” என்று கேட்டார்.

“இல்லை. இப்போது தான் முதன் முறையாக கேட்கிறேன். ஆனால் எனது அம்மா நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பதற்கு முன் இதைத் தான் என் தந்தையிடம் கூறினார்” என்றான்.

ஆசிரியர் கதையை தொடர்ந்தார்.

கப்பல் மூழ்கியது. கடலில் மூழ்கிய மனைவியின் கணவர் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தார். தன் மகனையும் மகளையும்  நல்லபடியாக வளர்த்து அவர்களை நல்ல நிலைக்கு வர வழிவகை செய்து கொடுத்தார்.

பல வருடம் கழித்து அந்த கணவர் இறந்து விட்டார். அவர் இறந்த பின் அவர் அறையில் இருந்த தந்தையின் டைரியை மகள் படிக்க நேர்ந்தது.

  கழித்து அந்த மனிதன் இறந்த பிறகு, அவளுடைய மகள் தனது உடமைகளைத் திருப்திபடுத்தும் போது தனது நாட்குறிப்பை கண்டுபிடித்தார்.

அதில் கப்பலில் மனைவி மூழ்கிய சம்பவம் பற்றியும் எழுதப்பட்டிருந்தது.

கப்பலில் சுற்றுலா செல்வதற்கு ஒரு மாதம்  முன்புதான் அவர் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. புற்றுநோயின் கடைசிக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் குணப்படுத்துவதற்கு வழியில்லாமல் இருந்தது. தன்னுடைய கடைசி நாட்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மனைவியை மகிழ்விக்கவே கப்பலில் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார்.

அன்று மனைவியை தப்ப வைத்து அவர் கடலில் மூழ்கியிருந்தாலும் தங்களுடைய குழந்தைகளை காப்பாற்றுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்.

”நானும் அவளுடன் கடலின் அடியாளத்தில் மூழ்கிப் போகவே வீரும்பினேன். ஆனால் குழந்தைகளை காப்பாற்ற நான் உயிரோடு இருந்தாக வேண்டும் என்ற சூழ்நிலை என்னை படகில் குதிக்க வைத்தது”

இந்த வரிகளை படிக்கும் போது மகளின் விழியோரம் கசிந்த நீரை அவளின் பெற்றோர் இருவரும் வானுலகில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தனர்.

கப்பலில் இருந்து படகில் குதிக்கும் போது கொடூரமான வில்லனாக தெரிந்த கணவர் கடைசியில் அவர் எழுதியிருந்த டைரியை படிக்கும் போது அழகான பாசமான அப்பாவாக தெரிகிறார்.

உலகத்தில் நல்லது தீயது என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது அர்த்தங்கள் மாறுபடுகின்றன.

விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது. விழி திறந்து  உலகை பார்ப்பவனுக்கு ஒரு நிகழ்வில் இருக்கும் பல கோணங்களை புரிந்து கொள்ளுமளவுக்கு காலம் நீண்டிருக்கும்.

நாம் காணும் ஒவ்வொரு நிகழ்வும் குளத்தில் எறிந்த கற்களைப் போன்றவைகள். அவை கண்ணில் படுவதில்லை. ஆனால் கரைந்து போகாமல் நீருக்குள் அமிழ்ந்து கிடக்கும். மூழ்கித் தேடினால் கிடைக்கும். ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை புரியும்.

முட்டாள் என்று முத்திரை குத்தப்படுபவரை இன்னொரு கோணத்தில் பார்த்தால் அவருக்குள் இருக்கும் புத்திசாலித்தனம் தெரியும்.

0 comments:

Post a Comment