Friday, December 21, 2018

குரூப் - 2: அசல் சான்றிதழ் பதிவு
*இது குறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு*
*குரூப் - 2 பதவிகளில், முதன்மை தேர்வு எழுத, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய வேண்டும். 24 முதல், ஜன., 10 மாலை, 5:30 மணி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது*
*டி.என்.பி.எஸ்.சி.,யால் தேர்வு செய்யப்பட்டுள்ள, அரசு, இ - சேவை மையங்கள் வழியாக, சான்றிதழ்களை பதிவு செய்ய வேண்டும்*
*குறிப்பிட்ட அவகாசத்தில் பதிவேற்றம் செய்யாதவர்கள், முதன்மை தேர்வில் பங்கேற்க விருப்பம் இல்லாதவர்கள் என, கருதப்படுவர்*
*முதன்மை தேர்வுக்கு, கட்டண சலுகை கோராதவர்கள், ஜன., 10க்குள், தேர்வு கட்டணமான, 150 ரூபாயை செலுத்த வேண்டும்*
*தவறினால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வு கட்டணம் செலுத்திய பின், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது*

0 comments:

Post a Comment