Monday, December 17, 2018

பிபிசி
ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிகிறேன் என்று உரையாற்றிய ஸ்டாலின் பாசிஸ பாஜக அரசை வீழ்த்த ராகுல் காந்தியுடன் கைகோர்ப்போம் என்று தெரிவித்தார்.
கருணாநிதியின் சிலை திறப்புக்கு பிறகு ஒய்எம்சிஏ மைத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி ஆகியோர் உரையாற்றினர்.
அதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது, "நரேந்திர மோதியால் இந்தியாவின் மத நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்பட்டிருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துக் கொண்டிருக்கிறது. மோதியின் ஆட்சியில் நாடு 50 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மாநில சுய ஆட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தன்னை கருதாமல் ஏதோ பரம்பரை அரசர் என்ற மமதையுடன் மோதி நடந்துக் கொள்கிறார்.
தன்னையே ரிசர்வ் வங்கியாக, வருமானத் துறையாக, சிபிஐயாக மோதி நினைத்துக் கொண்டிருக்கிறார். மோதி ஒரு `சாடிஸ்ட்` பிரதமராக நடந்துக் கொண்டிருக்கிறார்.
கஜ புயலுக்கு 16,000 கோடி இழப்பீடு கேட்கப்பட்டது. இந்த பேரிடர் குஜராத்திலோ, மஹராஷ்டிராவிலோ ஏற்பட்டிருந்தால் மோதி பார்வையிட்டிருப்பார்.
கஜ புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்தியையும் மோதி அனுப்பவில்லை. பிற நாடுகளில் ஏற்பட்ட துயரங்களுக்கு செய்தி அனுப்பிய மோதி தமிழகத்துக்கு அனுப்பவில்லை.
மோதியை வீழ்த்த 21 கட்சிகள் ஒன்றிணைந்திருக்கிறோம். ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிகிறேன் என்று தெரிவித்த ஸ்டாலின் பாசிஸ பாஜக அரசை வீழ்த்த ராகுல் காந்தியுடன் கைகோர்ப்போம் என்று தெரிவித்தார்.
’இந்தியாவின் ஒருமைப்பாட்டைமத்திய அரசு அழிக்கிறது ’ - ராகுல் காந்தி
ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
"இன்று மத்தியில் உள்ள அரசு மக்களின் குரலை ஒடுக்குகிறது. தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் அழிக்கிறது." என்று ராகுல் காந்தி தன் உரையில் குறிப்பிட்டார்.
"மத்திய அரசு மக்களின் குரலை மதிக்கவில்லை, கருணாநிதியை நினைவில் கொண்டு நாடு முழுவதும் உள்ள மக்களின் குரலை ஒன்று திரட்டி இப்போதுள்ள பாஜக அரசை அகற்றுவோம்."
"மத்திய அரசு இந்தியாவின் ஒருமைப்பாட்டை அழிக்க நாம் விடப்போவதில்லை."
"உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை மத்திய அரசு அழிப்பதை நாம் ஏற்க போவதில்லை."
நாம் ஒன்றுப்பட்டு மத்திய அரசை அகற்றுவோம் என்று பேசினார் ராகுல் காந்தி.
"மத்திய அரசால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்" - சந்திரபாபு நாயுடு
தமிழ் மொழியில் தனது உரையைத் தொடங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழ் மொழியை கற்றுக்கொண்டு இனி அடுத்த நிகழ்ச்சிகளில் பேசப்போவதாக தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் பாஜகவால் ஏதாவது பயனை நீங்கள் யாரவது பெற்றுள்ளீர்களா என குழுமியிருந்த மக்களைப் பார்த்து கேட்ட சந்திரபாபு நாயுடு, தற்போது ஆட்சியில் உள்ள மத்திய அரசால் அனைவருமே பாதிக்கப்பட்டுளோம் என்று கூறினார்.
கருணாநிதி
''மத்திய அரசால் இந்தியாவின் கூட்டாட்சி முறை முற்றிலும் சீரழிக்கப்பட்டுள்ளது. சிபிஐ, ரிசர்வ் வங்கி என தன்னாட்சி நிறுவனங்களை சீரழித்து வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தில் வலுவான நம்பிக்கை கொண்டிருந்தவர் கலைஞர். தென்னிந்தியாவே பெருமைகொண்ட தலைவராகஇருந்தவர். திமுகவுக்கு வாக்களிப்பது மூலமாக நாட்டின் முன்னேற்றத்திற்குத் தமிழக மக்கள் உதவேண்டும்,'' என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
`தமிழகத்தில் ஸ்டாலின் வெற்றி பெறுவார்` - நாரயணசாமி
தமிழகத்தை ஆளும் கட்சிக்கு கலைஞர் கருணாநிதியை கௌவரவிக்கும் எண்ணம் இல்லை என்றும் புதுச்சேரி மாநிலத்தைப் பார்த்தாவது கலைஞரை கௌரவிக்க தமிழக அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
"கலைஞர் மறைந்த அன்றே புதுவை மாநிலத்தில் அவருக்கு வெண்கல சிலை வைக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது, அவரது பெயரில் புதுச்சேரி பல்கலையில் இருக்கை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன" என்று கூறினார்.
''புதுவை மற்றும் காரைக்காலில் இரண்டு சாலைகளுக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும். கலைஞர் பெயரில் பட்டப்படிப்பு, பாண்டிச்சேரி பல்கலையில் இருக்கை என நாங்கள் கௌரவித்தோம். சாதாரண தொண்டராக தொடங்கி, சாதாரண மக்களின் வாழ்வை உயர்த்தவேண்டும் என்று பாடுபட்டவர். அவர் விட்டுச்சென்ற பாதையை நாம் தொடரவேண்டும்,'' என்றார்.
மேலும் 2019 தேர்தலில் நரேந்திர மோதிக்கு சிம்மசொப்பனமாக ராகுல் காந்தி இருப்பார் என்றும், தமிழகத்தில் ஸ்டாலின் வெற்றிபெறுவார் என்றும் கூறி நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக பேச்சை தொடங்கிவைத்தார் நாராயணசாமி.
"பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்"- பினராயி விஜயன்
இந்த கூட்டத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ் வளர்ச்சிக்காக கருணாநிதி ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றது என்றும், அவர் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
"சமூக வளர்ச்சியுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சியே முக்கியம் என்றவர் கருணாநிதி. பெண்கள் முன்னேற்றத்திற்கு கருணாநிதி ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை. திருநங்கைகளுக்காக பல முன்மாதிரி திட்டங்களை கருணாநிதி கொண்டு வந்துள்ளார்."
எதிர்கட்சித் தலைவர்களை எப்போதும் மதிக்க கூடியவர் கருணாநிதி என்றும் தெரிவித்தார் பினராயி விஜயன்.

0 comments:

Post a Comment