Thursday, December 20, 2018

புதுக்கோட்டை,டிச.19:ஆசிரியர் பயிற்றுநர்கள்  கணினி வளங்களை பயன்படுத்தி இணையவழியில் கற்றல் கற்பித்தல்  தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசினார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள்மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கணினி வளங்களைக் கொண்டு இணையவழியில் கற்பிக்கும் பயிற்சி மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

பயிற்சியினை  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்துப் பேசியதாவது: ஆசிரியர் பயிற்றுநர்கள் கற்றல் கற்பித்தல் தொடர்பான தொழில்நுட்ப முன்னேற்றங்களை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.இப்பயிற்சியின் மூலம் ஆசிரியர் பயிற்றுநர்கள் புதிய கற்பித்தல் வழிமுறைகளைப் பிற ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது..மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்திடும் வகையில் கல்வித் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் ஆசிரிய பயிற்றுநர்கள் தனித்திறன் மிக்கவர்களாக விளங்கிட வேண்டும்.மேலும் பல்லூடகங்களை பாதுகாப்புடன் பயன்படுத்தி கற்பிக்கும் யுக்திகளை மேம்படுத்திட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருட்களை பயன்படுத்திட வேண்டும் என்றார்.

ஒருங்கிணைந்த கல்வி உதவித்திட்ட அலுவலர் இரா.ரவிச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். 

பயிற்சியின் கருத்தாளர்களாக பனங்குளம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கருப்பையன்,செவ்வாய்பட்டி பள்ளி ஆசிரியர் காசிராஜன்,இலைகடிவிடுதி பள்ளி ஆசிரியர் காசி விஜயன் ஆகியோர் செயல்பட்டனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் செய்திருந்தார்.

0 comments:

Post a Comment