Friday, December 14, 2018



🔖அனைத்து அரசுப் பள்ளிகளிலும், 13.12.2018 முதல் Attendance App ன் மூலம் தினமும் காலை மற்றும் மதியம் மாணவர் வருகைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.👉தாங்கள் ஏற்கனவே TN SCHOOLS  என்ற app பயன்படுத்தி மாணவர் வருகையை  தினந்தோறும் ஆன்லைனில்  பதிவு செய்து வருவீர்கள் என நம்புகிறேன்.தற்போது  புதிய மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் app வெளியிடப்பட்டுள்ளதால் ஏற்கனவே உள்ள app ஐ Remove and uninstall செய்து விட்டு புதிய வெர்ஷனை மீண்டும் playstore ல் போய் download பண்ணி பயன்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.  பழைய வெர்ஷனைப் பயன்படுத்தி வருவதால் Attendance Report பதிவு செய்யாதது போல் காட்டக்கூடும்.எனவே புதிய app பயன்படுத்தவும்.
👉App open செய்து home page ல்  வலப்புறம் மேல் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்து பார்க்கவும். மேற்கண்டவாறு open ஆகும் பக்கத்தில் கீழே நீங்கள் பயன்படுத்தும் app  version இருக்கும்.அதில் V.2.0.3 என இருந்தால் புதிய வெர்ஷன்.
👉தினமும் முற்பகலும் பிற்பகலும் வருகைப் பதிவு செய்தபின் Report கிளிக் செய்து வகுப்பு வாரியாக பச்சை டிக் விழுந்துள்ளதா? என பார்க்கவும்.
👉ஆன்லைனில் மாணவர் வருகைப் பதிவு செய்யும் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
👉நீங்கள் தினமும் வருகைப் பதிவு செய்யும் போது பள்ளியில் வைத்து பதிவு செய்யவும்.வெளியிலோ வீட்டிலோ வைத்து பதிவு செய்தால் உயர் அதிகாரிகள் நீங்கள் எங்கு வைத்து பதிவு செய்கிறீர்கள் என்பதை அறியும் வகையில் சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.எனவே மிகுந்த கவனத்துடன் பதிவு செய்யவும்.ஆனால் தலைமை ஆசிரியர் விடுப்பிலோ கடமைப்பணியிலோ இருந்தால் உதவி ஆசிரியர்களும் அதே app பயன்படுத்தி பள்ளியிலிருந்தே வருகையைப் பதிவு செய்யலாம்.

🔖Play store ல், TNSCHOOLS app ஐ ( ஏற்கனவே install செய்திருந்தால் அதை uninstall செய்துவிட்டு) புதிதாக install செய்ய வேண்டும்.

🔖 user id: school UDISE number.
🔖Password: EMIS password.

🔖கீழே கொடுக்கப்பட்ட வீடியோவினை பார்த்து அதில் கூறியுள்ளபடி தினமும் மாணவர் வருகையை Attendance App ல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



0 comments:

Post a Comment