*பிளாஸ்டிக் தடை எதிரொலியாக பள்ளிகளில் செயல்வழி கற்றலில் தெர்மாகோல் பயன்படுத்தக் கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது*
*தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது*
*அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அமலுக்கு வருகிறது*
*ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது*
*இதற்காக துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன*
*அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது*
*மேலும் நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்து வரக்கூடாது*
*மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது*
*வரும் 1ம் தேதி முதல், பள்ளி வளாகத்தில், பிளாஸ்டிக் இல்லாத, பசுமை வளாகமாக மாற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது*
0 comments:
Post a Comment