Wednesday, December 5, 2018

சென்னை: தங்கம் விலை நேற்றும் சவரனுக்கு ₹184 உயர்ந்தது. இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த மாதம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது, கடந்த 1ம் தேதி ஒரு சவரன் ₹23,240க்கு விற்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சவரனுக்கு ₹200 அதிகரித்து ஒரு சவரன் ₹23,440க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ₹23 அதிகரித்து ஒரு கிராம் ₹2,953க்கும், சவரனுக்கு ₹184 அதிகரித்து ஒரு சவரன் ₹23,624க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களாக தங்கம் விலை சவரனுக்கு ₹408 அளவுக்கு உயர்ந்துள்ளது. 

இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கிடையே, தங்கம் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து சென்னை தங்கம் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், “அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி. அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் வரும் நாட்களில் சவரனுக்கு ₹200 வரை விலை உயரத்தான் அதிகமான வாய்ப்புள்ளது” என்றார். 

0 comments:

Post a Comment