மனித உரிமைகள் (Human Rights)
மனித மாண்பு எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அல்லது மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அவர்களின் மாண்பை காக்கும் உரிமையே மனித உரிமைகளாகும். இது எந்நாட்டவருக்கும், உலகெங்கும் பொருந்தக் கூடியதாகும்.
மனித உரிமைகள் மீறல் என்றால் ?
ஒவ்வொரு மனிதனுடைய மனித உரிமைகளையும் காப்பதற்குரிய செயல்படுத்த கட்டுப்பாடும் அரசுக்கு உண்டு. அதனை செயல்படுத்த இயலாத நிலையில் அரசோ, காவல்துறை அரசு அதிகாரிகள், வனத்துறை, ஆயுதப்படை அதிகாரி, அரசு சார்பாக ஒப்பந்தக்காரரைப் போல் செயல்படுகின்ற எவரேனும் ஒருவர் அடுத்தவரின் மனித உரிமையில் தலையிட்டோ மரியாதைக் குறைவாக நடத்துகிறார் எனில் அவைகளும், மனித உரிமைகள் மீறல்களே. மனித உரிமைகள் அரசுக்கு எதிராகவே கோரப்படுகின்றது. தனி மனிதர்களுக்கு எதிராக கோரப்படுவதில்லை. இருப்பினும் ஒரு தனி மனிதன் இன்னொருவரின் வாழ்வுரிமைகளான சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் தொடர்பான உரிமைகளை மீறினால் பாதிக்கப்பட்டவர் அந்த உரிமை மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசினை அணுக முடியும். அரசு அந்த உரிமையை மீறுவோருக்கு தண்டனை வழங்கவோ (அல்லது) தடுத்து நிறுத்தவோ தவறினால் அப்போது அது மனித உரிமை மீறலாக மாறுகிறது.
மனித உரிமை மீறலுக்கான சில வரையறைகள் :
மக்களுடைய வீடுகள், நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆகியவற்றில் தொழிற்சாலையால் வெளியிடப்படும் நச்சு, வேதியியல் கழிவுகள் கலக்காமல் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதற்கு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தவறுவதே
வாழ்வுரிமை மீறலாகும்.
- காவலரால் சந்தேகப்பட்டு அடித்தல், விலங்கிடல் மற்றும் சித்ரவதை செய்தல் என்பன மனித மாண்பு மற்றும் உடல் பாதுகாப்புக்கு எதிரான உரிமை மீறலாகும்.
- ஒரு பெண் சிறைக் கைதி சிறைக்காப்பாளரால் கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்ற புகார் அடிப்படையில் குற்றவியல் நடுவர் நடவடிக்கை எடுக்க தவறுதல் சட்டப்படி சம பாதுகாப்பளிக்கும் உரிமை மீறலாகும்.
- தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு கோவிலில் வழிபட, கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்கத் தடுக்கின்ற உயர் சாதி மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மறுத்தல் பாகுபாடு சார்ந்த உரிமை மீறலாகும்.
வேலைத் தளங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியம் கொடுக்கப்படுவதையும், பணி உயர்வில் சம வாய்ப்பு கொடுக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கு முதலாளிகளுக்கான சட்ட வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த தொழிலாளர் துறையினர் புறக்கணித்தல் சம வாய்ப்பிற்கான உரிமை மீறலாகும்.
பாதுகாப்பு படையில் பாதுகாப்பு நோக்கத்திற்காக ஒரு கடையின் சொந்தகாரருக்கு இழப்பீடு கொடுக்காமல் எடுத்துக் கொள்ளுதல். வாழ்வாதார உரிமை மீறலாகும்.
மாவட்ட நிர்வாகம் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விரிவாக வெளியிட மறுத்தல் செய்தி பெறும் உரிமை மீறலாகும்.
புலனாய்வுக் குழுமத்தால் முகம்மதியர் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு மதபாடங்கள் கொடுக்கப்படுவதை அவர்கள் தேச விரோதிகள் என்று காரணங்களை காட்டி மறுத்தல் மதவுரிமை மீறலாகும்.
வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட காடு அழிக்கப்படுவதையும், சட்டத்திற்குப்புறம்பாக மரங்கள் வெட்டப்படுவதையும் கட்டுப்படுத்த இயலாதிருந்தால் சுற்றுச்சூழல் உரிமை மீறலாகும்.
அரசு என்பது மத்திய மாநில அரசுகளையும் மேலும் நாட்டை நிர்வகிக்க உதவுகின்ற நிறுவனங்கள் முகவாண்மைகள் ஆகியவைகளை உள்ளடக்கிய அனைத்து மக்களையும் குறிக்கும். மாவட்ட ஆட்சி அலுவலர்கள் ஊராட்சி அமைப்புகள், நீதி மன்றங்கள், நகராட்சி, அஞ்சல்துறை, மின்சாரத்துறை, அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான அரசின் கட்டுப்பாட்டிற்குள்ள குழுக்கள் அனைத்துமே அரசின் அங்கமாகவே குறிக்கப்படும்.
காவல் துறையை பற்றிய மனித உரிமைகள் :
- கைது செய்யும் பொழுது அதற்கான காரணம் சொல்ல வேண்டும்.
- கைதுக்கு கைவிலங்கு போட நீதிபதியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
- 16 வயதிற்கு கீழ் உள்ள ஆண் / பெண் சிறுவர்களை விசாரணை என்ற பெயரில்
இருக்கும் இடத்தைவிட்டு அழைக்கக் கூடாது.
- பெண்களை மாலை 6.00 மணிக்குமேல் கைது செய்யக்கூடாது.
- கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்.
- கைதியை அடிக்கக் கூடாது.
0 comments:
Post a Comment