1) கர்ப்பினிப் பெண்களுக்கு மந்தமாக இருப்பதை அகற்ற கறிவேப்பிலை இலையின் சாறுடன் இரண்டு சிறுகரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு நாட்டுச் சர்க்கரை கலந்துப் பருக வேண்டும். இதனால் மந்தத் தன்மை குறைக்கப்படும்.
2) மலச்சிக்களில் இருந்து விடுபடக் கொதிக்கும் நீரில் கறிவேப்பிலையைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரினைக் குடிப்பதற்கு முன் சிறிது தேன் கலந்துப் பருக வேண்டும். இவ்வாறு குடிப்பதன் மூலம் மலச்சிக்கலிலிருந்து விடுபடலாம்.
3) பாம்பு கடித்தால் கறிவேப்பிலை இலையுடன் பச்சை மஞ்சள் கலந்து பாம்பு கடித்த இடத்தில் தடவ வேண்டும். இதனைப் பாம்புக் கடிபட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்வதற்கு முன்னர் முதலுதவியாகச் செய்ய வேண்டும்.
4) பச்சைக் கறிவேப்பிலை இலைகளைச் சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
5) கறிவேப்பிலையின் இலைகள், வேர்கள், பட்டைகள், தண்டுகள் மற்றும் பூக்களை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் வயிற்றில் ஏற்படும் அனைத்து விதமான தொந்தரவுகளிலிருந்து விடுபடலாம்.
6) காய்ந்த கறிவேப்பிலைகளிலிருந்து தேநீர் செய்து அந்தத் தண்ணீரைப் பருக வேண்டும். இவ்வாறு குடிப்பதன் மூலம் வாந்தி உணர்வுக் குறைகப்பட்டு பசியுணர்வு அதிகரிக்கும்.
7) கறிவேப்பிலைச் சாற்றினைக் குழந்தைகளுக்குப் பருகக் கொடுப்பதன் மூலம் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வயிற்று வலி குறைக்கப்படுகிறது.
8) ஒரு தேக்கரண்டி எண்ணெய்யுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து கருகும் வரை சூடுபடுத்த வேண்டும். பிறகு இதனை முடிச்சாயமாகப் பயன்படுத்தினால் கருமையான முடியினைப் பெறுவதுடன் செம்பட்டை முடி அல்லது இளநரை வராமல் பாதுகாக்கலாம்.
கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்:
கறிவேப்பிலையில் பாஸ்பரஸ், வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் இருபுச்சத்து, கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள், அமினோ அமிலங்களான கிலைகோஸைட்ஸ், செரின், அஸ்பார்டிக் அமிலம், அலனைன், புரோலைன் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.
கறிவேப்பிலையின் மணத்திற்கும் சுவைக்கும் இவைகள் தான் காரணம். இவ்வாறு பல்வேறு சத்துக்களையும் மருத்துவக் குணங்களையும் கொண்ட கறிவேப்பிலை உடலிற்கு பலத்தையும், எலும்புகளுக்குச் சக்தியினையும் அளிக்கிறது.
நாம் உண்ணும் உணவில் தேவையில்லை என்று நாம் தூக்கி எறியும் கறிவேப்பிலையில் நிறைந்துள்ள நன்மைகளை அறிந்து கொண்டீர்கள். எனவே நமது தமிழ்ச் சித்தர்கள் அதிகம் பயன்படுத்திய கறிவேப்பிலையை உணவில் சேர்த்து அதன் பன்களை முழுமையாக அடைய வாழ்த்துக்கள்.
கறிவேப்பிலையைச் சுவையுங்கள் நோயிலிருந்து விடுபடுங்கள்.
0 comments:
Post a Comment