Monday, December 10, 2018


தேசிய மனித உரிமைகள் ஆணையம்

  • 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மனித உரிமைகள் சட்டத்தின்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்தியாவில் அக்டோபர் 12 , 1993 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாணையம் தலைவர் ஒருவரையும் ,நான்கு உறுப்பினர்களையும் கொண்ட· து.
  • இவ்வாணையத்தின் தலைவர் பொதுவாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பா· ர்.
  • ஆணையத்தின் ஒரு உறுப்பினர் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவும், மற்றொரு உறுப்பினர் மாநில உயர் மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவும் மீதமுள்ள இரு உறுப்பினர்கள் மனித உரிமைகள் சார்ந்த செயல் அனுபவமிக்கவராக இருக்க வேண்டும். இவர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

அமைப்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையிடம் புதுடில்லி ஆகும்.
  • குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரின் ஆணையின் பேரில் பணி நீக்கம் செய்யப்படலாம்.
  • ஆணையத்தின் தலைவர் 5 ஆண்டுகளோ அல்லது 70 வயது வரையிலோ இப்பதவியில் பணியாற்றலாம். மற்ற உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் பதவி வகிக்கலாம்.
  • குடியரசுத் தலைவர் விரும்பினால் இவர்களை மீண்டும் 5 ஆண்கட்கு மறுநியமனம் செய்யலாம்.

ஆணையத்தின் பணிகள்

  • இதன் முக்கிய நோக்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் ,மேம்படுத்துவதும் ஆகும்.
  • மனித உரிமைகள் சம்பந்தமாக ஆய்வுகள் நடத்தி, அது சம்பந்தமான கல்வியறிவினை மக்களிடையே பரப்புவது,
  • ஊடகங்கள் மூலமாகவும், கருத்தரங்கம் மூலமாகவும் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • மனித உரிமைகள் மீறப்படும் போது பாதிக்கப்பட்டவர்கள் மனு செய்தாலோ அல்லது ஆணையம் தானாகவே முன் வந்து பாதிக்கப்பட்டவர்களை விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கும்.
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம் கீழ்க்கண்டவற்றிற்கு முன்னுரிமை வழங்கி பணியாற்றுகிறது.
  • மக்களின் வாழ்வியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும்,
  • மனித உரிமைகளுக்கு எதிராக கொண்டுவரப்படும் சட்டத்தினை ஆய்வு செய்யவும்,
  • காவல் துறையினரின் வன்முறை மற்றும் கற்பழிப்பு போன்றவற்றை அகற்றுவது சம்பந்தமாகவும் ,
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் குறைகளை களைவதற்கும்
  • பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னுரிமை வழங்குகிறது.

0 comments:

Post a Comment