Monday, October 29, 2018

ஜைசால்மர் கோட்டை : ரஜபுத்திர அரசர் ராவல் ஜைசால் என்பவரால் 1156ஆம் ஆண்டு இக்கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. ஜைசால் மன்னரின் பெயராலேயே இது ஜைசால்மர் கோட்டை என்று விளிக்கப்படுகிறது. பெரும் படையெடுப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் மூன்றடுக்கு சுவர்களால் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.

ஜெய்சால்மர் நகரின் இதய பகுதியில் அமைந்திருக்கும் இக்கோட்டையானது வரலாற்று காலம் நெடுகிலும் எண்ணற்ற போர்களையும், முற்றுகைகளையும் சந்தித்திருக்கிறது. அதிலும் 1294ஆம் ஆண்டு துருக்கியை சேர்ந்த கில்ஜி வம்சத்தின் இரண்டாவது அரசனான அலாவுதீன் கில்ஜியால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகை தாக்குதலின் முடிவு நம் நெஞ்சை பதற வைக்கும்
கில்ஜியின் சொந்த நாடான துருக்கியில் இருந்து ராஜஸ்தான் வழியாக 3000க்கும் மேற்ப்பட்ட குதிரைகளில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களை ஜைசால்மர் ராஜ்யத்தை சேர்ந்த பட்டி இனத்தவர்கள் கொள்ளையடித்துவிடுகின்றனர் . இதனை கேள்வியுற்று வெகுண்டெழுந்த அலாவுதீன் கில்ஜி ஜைசால்மர் நகரின் மீது படையெடுத்து செல்கிறார்.

அலாவுதீன் கில்ஜியின் படைகள் இந்த ஜைசால்மர் கோட்டையை கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் முற்றுகையிட்டு போர் புரிகின்றன. இந்த எட்டு வருடங்களும் போருக்கு காரணமாக அமைந்த பட்டி வம்சத்தினரே கில்ஜியின் படைகளுக்கு எதிராக வீரம் செரிக்க போர் புரிந்திருக்கின்றனர். பின்னர் ஒருகட்டத்தில் கோட்டையினுள் சேமிக்கப்பட்டிருந்த உணவு தீர்ந்துபோகிறது.

அதே காலகட்டத்தில் ஜைசால்மரின் அரசர் ஜெத்சியும் மரணமடைகிறார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட கிஜ்லி தனது படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததோடு மட்டுமில்லாமல் வெளியிலிருந்து கோட்டைக்கு உணவு கொண்டு செல்லப்படும் எல்லா பாதைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்

உணவு பற்றாக்குறை, அரசரின் இழப்பு ஆகிய காரணங்களினால் ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்த கோட்டையினுள் இருந்த பட்டி வம்ச பெண்கள் 'ஜௌஹர்' என்ற சடங்கை மேற்கொள்ள துணிகின்றனர். போரில் தோல்வி உறுதியான பின்பு எதிரி படை வீரர்களின் கைகளில் சிக்கி தங்களின் மானத்தை இழக்காமல் இருக்க ரஜபுத்திர அரசியும், பெண்களும் தங்களை தாங்களே நெருப்பிட்டு உயிர் மாய்த்துக்கொள்ளும் சடங்கே ஜௌஹர் ஆகும் .
கில்ஜி படைவீரர்கள் கோட்டையை கைப்பற்றிவிடுவார்கள் என்ற நிலை வந்ததும் இக்கொட்டையினுள் இருந்த 24,000 ரஜபுத்திர பெண்களும் தங்களை தாங்களே தீயிட்டு மாய்த்துக்கொள்கின்றனர். தீக்குளிக்க விரும்பாதவர்கள் தங்கள் கணவனின் கைகளால் சிரங்களை கொய்து கொண்டனர்
இது நடந்தவுடன் கோட்டையை பாதுகாத்து வந்த 3800 பட்டி வீரர்களும் கோட்டையின் கதவுகளை திறந்து எதிரியுடன் நேருக்கு நேராக சமர் செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். பின்னர் சில வருடங்கள் கழித்து மீண்டும் இக்கோட்டையை பட்டி வம்சத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர்.


html

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.