Monday, October 29, 2018









சத்துணவு ஊழியர் சங்கம்  இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சங்கத் தலைவர் சுந்தரம்மாள் அறிவித்துள்ளார்.

எனவே திங்கள்கிழமை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம்; சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும் என்று சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. 
சத்துணவு ஊழியர்கள் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று  முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் 43 ஆயிரம் சத்துணவு மையங்கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சத்துணவு ஊழியர்கள், வரையறுக்கப்பட்ட குறைந்தப்பட்ச ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை, உணவு தயாரிப்பு செலவை உயர்த்துதல் உள்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 25 முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை துவக்கினர். இதில், அக்.,25, 26, 27 மூன்று நாட்கள் சத்துணவு ஊழியர்கள் குழந்தைகளுக்கு சமைக்கும் பணியை கவனித்தவாறே போராட்டத்திலும் பங்கேற்றனர்.தேனி மாவட்ட தலைவர் நிலவழகன் கூறுகையில், ''இன்று, அக்.,29 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

இதனால் மாநிலத்தில் உள்ள 43 ஆயிரம் சத்துணவு மைய குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் பணி ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.,'' என்றார்.ஆசிரியர்கள் 

0 comments:

Post a Comment