Friday, October 26, 2018












செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval

தேவையான பொருள்கள்
 நண்டு - அரை கிலோ
 சின்ன வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 11/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய்த்துருவல் - கால் கப்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
கரம்மசாலா - 1 ஸ்பூன்


செய்முறை

சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக  அரைத்து கொள்ளவும்.
 தேங்காய்த்துருவல், கசகசா. பெருஞ்சீரகம், கரம் மசாலாவை அரைத்து  விழுதாக்கவும். 

கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து, நசுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும். 

பின் மஞ்சள்தூள், மிளகாய் தூள் இஉப்பு, நண்டு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.  நண்டு வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கினால் சுவையான செட்டிநாடு நண்டு வறுவல் ரெடி.

0 comments:

Post a Comment