Tuesday, October 30, 2018



அறத்துப்பால்,
 தீவினையச்சம், 
குறள் 204,






மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

பரிமேலழகர் உரை (இதன்பொருள்)

பிறன் கேடு மறந்தும் சூழற்க= ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாது ஒழிக;சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்= எண்ணுவனாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும்.

பரிமேலழகர் உரைவிளக்கம்'கேடு' என்பது ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதே தானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான்நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.

மு.வ : பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.சாலமன் பாப்பையா : மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.

0 comments:

Post a Comment