Tuesday, October 30, 2018


தேவையான பொருட்கள்
சின்ன உருளைக்கிழங்கு – ஒரு கப் (வேகவைத்து, தோலுரித்தது)
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – அரை டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
வறுத்த வேர்கடலை – இரண்டு டீஸ்பூன்)
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சீரக தூள் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
வறுத்த வெள்ளை எள்ளு – இரண்டு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
பிறகு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வறுத்த வேர்கடலை, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி, மஞ்சள் தூள், பெருங்காயம், சீரக தூள், வேகவைத்து, தோலுரித்த சின்ன உருளைகிழங்கு, உப்பு சேர்த்து கிளறி, நான்கு நிமிடம்  சிம்மில் வைத்து, பின், அதில் வறுத்த வெள்ளை எள்ளு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும்.

0 comments:

Post a Comment