Tuesday, October 30, 2018


ரூ. 77 ஆயிரம் பணத்தை தூள்தூளாக்கிய 2 வயது சிறுமி

அமெரிக்காவில் பெற்றோர்கள் சேர்த்து வைத்திருந்த ரூ. 77 ஆயிரம் மதிப்புமிக்க பணத்தை, அவர்களது 2 வயது மகன் தூள்தூளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தாவை சேர்ந்த பென் மற்றும் ஜான் தம்பதியினர், பல காலமாக உழைத்து சம்பாதித்த 1383 டாலர் பணத்தை சேகரித்து ஒரு காகித பைக்குள் வைத்திருந்தனர். பணத்தை வீட்டின் அலமாரியில் வைத்து விட்டு தம்பதிகள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். 

வீடு திரும்பி பார்த்த போது, பணமிருந்த காகித பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், வீடு முழுக்க பணத்தை தேடியுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை. இது அவர்களை மிகவும் கவலையடைச் செய்தது. 

அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த தங்களது 2 வயது மகனிடம், தம்பதிகள் கேட்டுள்ளனர். குழந்தை பணம் வைத்திருந்த காகித பையை, காகிதங்களை கத்தரிக்கும் இயந்திரத்தில் போட்டுவிட்டதாக சொல்லியுள்ளாள்

உடனே இயந்திரத்தை பார்த்த போது, பணம் அடங்கிய பை, முற்றிலும் கத்தறிக்கப்பட்டு தூள்தூளாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவை இதுவரை 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். அதனை அடுத்து, கத்தறிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்தால் 2 ஆண்டுகாலத்திற்கு பின்னர் அவர்களது பணம் ஒப்படைக்கப்படும் என அவர்களது நண்பர் அவர்களிடம் தெரிவித்ததாக தகவல் தெரிவித்தனர். 

0 comments:

Post a Comment