Thursday, October 25, 2018

சளி ஒரு பொதுவான நோய். அது பெரியவர்கள் இளைஞர்கள் குழந்தைகள் என அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது. நமது வீட்டிலுள்ள பெரியவர்கள் நமக்கு எப்போதும் மாடர்ன் மருந்தை சளிக்கு பரிந்துரைக்க மாட்டார்கள். நீங்கள் மருந்து எடுக்காவிடிலும் சளி ஒரு வாரத்தில் குணமாகிவிடும் என்றே அவர்கள் கூறுவர். அலோபதி அல்லது ஆங்கில மருத்துவத்தை எடுத்துக்கொள்வதன் மூலம், சளி முழுவதுமாக சரியாவதில்லை. அது நமது உடலுக்குள்ளேயே இருக்குமே தவிர நமது உடலைவிட்டு வெளியேறுவதில்லை. அது நம் உடலை விட்டு வெளியேறுவதற்கான ஒரே வழி சித்த மருத்துவமே.

நமது வீட்டிலுள்ள பெரியவர்கள் குறிப்பாக நமது பாட்டிகள் இதற்காகவே நிறைய வீடு வைத்தியம் வைத்திருப்பார்கள். அவற்றில் சில உங்களுக்காக இந்த பதிவில் நம் பார்ப்போம்.



திரிகடுகம் கசாயம் 
30 கிராம் மிளகு, 50 கிராம் திப்பிளி, 50 கிராம் பானக்கற்கண்டு, 50 கிராம் கடுக்காய் தோல் ஆகியவற்றை போடி செய்து தினமும் மூன்று வேலை சாப்பிடவும். அவ்வாறு சாப்பிட்டு வர சளி குணமாகும். பெரியவர்கள் 1 ஸ்பூன் சாப்பிடலாம் குழந்தைகளுக்கு 1/2 ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்
இஞ்சி 
10ml இஞ்சி சாறு, 10ml ஆடாதொடை இல்லை சாறு மற்றும் 10ml தேன் ஆகியவற்றை கலந்து தினமும் மூன்று முறை காலை, பிற்பகல், மாலை என குடிக்க வேண்டும்.

துளசி 
தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சிறுதளவு துளசி மற்றும் சிறிது கற்பூரவள்ளி சேர்க்கவும். 2 கப் தண்ணீர் அரை 1/2 கப் தண்ணீராக வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு அதை குடிக்கவும். இது இருமல் மூலம் உங்கள் சளியை வெளியே கொண்டு வரும்.







0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.