Wednesday, October 31, 2018


திருக்குறள்


அதிகாரம்:விருந்தோம்பல்

திருக்குறள்:88

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

விளக்கம்:

 விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.

பழமொழி

A drawing man will catch at a straw

நீரில் மூழ்குபவனுக்கு சிறு துரும்பும் தெப்பமாகும்

இரண்டொழுக்க பண்பாடு

* ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் என்னால் முடிந்த வரை பொருளாலும் உடலாலும் உதவி செய்வேன்.

* என்னால் முடிந்த வரை பொய் சொல்லாமல் நேர்மையாக இருக்க முயற்சி செய்வேன்.

 பொன்மொழி

தனியாக இருக்கும் போது சிந்தனையிலும், கூட்டத்தோடு இருக்கும் போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

     - பசும்பொன் முத்துராமலிங்கம்

பொது அறிவு

1.இந்தியாவில் சாந்தா குரூஸ் விமான நிலையம் அமைந்துள்ள நகரம் எது?

 மும்பை

2. இந்தியாவின் தற்போதைய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் யார்?


 சுரேஷ் பிரபு
நீதிக்கதை

அவரவர் பார்வையில்.... எண்ணங்கள்.....

 (ஒரு சுவாரஸ்ய கதை)

ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான்.

கடவுள் அவன் தவத்தை மெச்சி ,
‘என்ன வரம் வேண்டும் பக்தா ?’ என்றார்.

‘மற்றவர்களின் மனதில்...
 என்னைப்பற்றி.. என்ன நினைக்கிறார்கள்....
என்று..
 உணர்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான்.

கடவுளும் ‘வரம் தந்தேன்’ என்றார்.

சில நாட்களிலேயே அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து ....

,’தயவு செய்து இந்த வரத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றான்.

‘ஏன்?’ என்றார் கடவுள்.

‘அனைவருமே.....
 என்னை பொய் சொல்கிறவன்,.... பொறாமை பிடித்தவன்,....
 அடுத்தவன் குடி கெடுப்பவன், சோம்பேறி....நயவஞ்சகன்.......

என்றெல்லாம் நினைக்கிறார்கள் என்னால் தாங்க முடியவில்லை’.. சாமீ....  என்றான்.

‘அப்படியா, இந்த ஆலமரத்தின் அடியில்.. கண்களை மூடிப் படுத்துக் கொள்....
 என்ன நடக்கிறது என்று கவனி’ என்றார் கடவுள்.

அப்படியே செய்தான் பக்தன்.

அப்போது ஒரு குடிகாரன் வந்தான்.....

,’யார்ரா இவன் நினைவே இல்லாம படுத்திருக்கான் குடிகாரப் பயல் ‘என்று சொல்லி விட்டுப் போனான்.

பிறகு ஒரு திருடன் வந்தான்......

 ‘ராத்திரி பூரா கொள்ளையடிச்சுட்டு வந்து எவனோ இங்க படுத்து கிடக்கான்‘ என்று சொல்லிவிட்டுப் போனான்.

ஒரு நோயாளி வந்தான்.....

 ‘பாவம் வயித்துவலி போல சுருண்டு கிடக்கான்’ என்று சொல்லிவிட்டுப் போனான்.

ஒரு துறவி வந்தார்,....

 ‘யாரோ முற்றும் துறந்தவர் போல, அனைத்தையும் மறந்து உறங்குகிறார்’ என்று சொல்லி விட்டுப் போனார்.

சிறிது நேரம் கழிந்தது....
 கடவுள் பக்தனிடம் வந்தார்.

‘பார்த்தாயா....????

 உன்னைப் பற்றி அவரவர் அவரவர் கோணங்களில் புரிந்து கொள்கிறார்கள்...

 இனியாவது உன்னைப் பற்றிய மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்தாதே....!!!

ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புரிதல் இருக்கும்....
 உன்னுடைய சரியான பாதையில் தைரியமாக செல்...

 வெற்றி உனக்குத்தான்’ என்றார்.
பக்தன் தெளிவடைந்தான்....

நமது...
*வாழ்க்கையில்... தொழிலில்..... இல்லத்தில்..... நட்பில்...... பாசத்தில்.... ஏன்.. வாகனப்பயணத்தில்...*

மற்றவர்கள்....
என்ன...? ? எப்படி..???. என...
நமை நினைப்பார்களோ...!!!!!!????,,

என்று எண்ணிடாமல்..
*கடிவாளம் போட்டு... வண்டியிழுக்கும்.... குதிரையைப்போல...*

*நீ...அடையும் இலக்கை..!!!!     நோக்கி பயணித்திடு....*

இன்றைய செய்திகள்

31.10.18

* 2018தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 நாட்களில் வடகிழக்குப் பருவ மழை துவங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், பதிவை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

* அடுத்த ஆண்டின் (2019) பொது விடுமுறை நாள்கள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. இதில் 22 நாள்கள் இடம்பெற்றுள்ளன.

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இறுதி ஆட்டம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கூட்டாக பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

* பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் வெல்வதின் மூலம் மீண்டும் உலகின் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேற உள்ளார் ஜோகோவிச்.

0 comments:

Post a Comment